Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிர்வாண விருந்து.. யாரந்த சினிமா நட்சத்திரம்? ரூ.1 லட்சம் கட்டணத்தில் பண்ணை வீட்டில் இப்படி டான்ஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து என்ற அறிவிப்பு கேள்விப்பட்டதுமே, ஏராளமான காதல் ஜோடிகளும், இளம் தம்பதிகளும் கலந்து கொள்வதில் பலத்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள்.. இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் பங்கேற்க முன்வந்ததாக தெரிகிறது.. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருப்பது யார்? சோஷியல் மீடியாவில் வெளியான அறிவிப்பு என்ன? சத்தீஸ்கர் மாநிலத்தில் என்ன நடந்தது தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்ப்போம்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடத்தப்பட்டு வந்த நிர்வாண நடனங்கள், தற்போது இந்தியாவுக்குள்ளும் நுழைந்துவிட்டது.. நட்சத்திர விடுதிகள், தனியார் ரிசார்ட்களிலும் போதைப்பொருள்கள் பயன்படுத்தி ஆபாச நடனமாடும் ரேவ் பார்ட்டிகள் அவ்வப்போது நடத்தப்பட்டும் வருகின்றன.

Resort Nude dance Naked party

நிர்வாண நடன நிகழ்ச்சி

சில வருடங்களுக்கு முன்பு, கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அடுத்துள்ள தனியார் ரிசார்ட்டில் இப்படியான நிர்வாண நடன நிகழ்ச்சி நடந்தது..

இந்த நடன நிகழ்ச்சியில் பெங்களுரு பகுதியில் வேலைபார்த்து வரும் ஐடி கம்பெனி ஊழியர்கள், மாணவர்கள், இளம் பெண்கள் என 40 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
இரவு நேரங்களில் மது மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்தி இவர்கள் ஆபாச நடனம் ஆடியதாக தெரிகிறது.

ரிசார்ட்டில் டான்ஸ்

இதுகுறித்து ஆனெக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவும், உடனே சம்பந்தப்பட்ட ரிசார்ட்டிற்குள் நுழைந்து, அங்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். 2 பெண்கள் உட்பட 35 பேரை கைது செய்தனர்.. ஆனாலும் போலீசாரை பார்த்ததுமே நிறைய பேர் தப்பி ஓடிவிட்டார்கள்..

நிர்வாண டான்ஸ்

கைதானவர்களிடம் விசாரணை நடத்தியபோது, ஆன்லைனில், ஹை ஆப்(highapp.com) என்ற செயலி மூலம் முன்பதிவு செய்து இந்த பார்ட்டிக்கு வந்தது தெரியவந்தது.. இந்த ரேவ் பார்ட்டியில் நடன அழகிகள் நிர்வாணமாகவும் டான்ஸ் ஆடியிருந்தது விசாரணையில் உறுதியானது..

தமிழக - கர்நாடக எல்லை பகுதியில் ரேவ் பார்ட்டியில் குடிபோதையில் நிர்வாணமாக நடமாடிய சம்பவத்தில் 35 பேர் கைதாகியிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை பொதுமக்களிடம் அன்றைய தினம் ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.

பண்ணை வீட்டில் நிர்வாண விருந்து

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ராய்பூரில் செயல்பட்டு வரும் பிரபல கிளப், SS பார்ம், ஸ்டேஞ்சர் ஹவுஸ் பூல் பார்ட்டி ஏற்பாட்டாளர்கள் என அனைவரும் இணைந்து ஒரு நிர்வாண விருந்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, வருகிற 21ந்தேதி பிரபலமான பண்ணை வீட்டில் இந்த நிர்வாண விருந்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர்.. இந்த நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், மும்பை, பெங்களுருவை சேர்ந்த சினிமா நட்சத்திரங்களும் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்துள்ளனர்.

ஆனால், இந்த நிகழ்ச்சி எங்கே நடக்க போகிறது? என்ற விவரத்தையும் ரகசியமாகவே வைத்திருந்தனர். நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்கு வருபவர்கள் செல்போன்களை கொண்டு வரக்கூடாது என்றும் கண்டிஷன் போடப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் கட்டணம்

அதுமட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தலா ரூ.40 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. இப்படியொரு நிகழ்ச்சியை கேள்விப்பட்டதுமே, காதல் ஜோடிகள், இளம் தம்பதியினர் என பலரும் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.. 40 ஆயிரம் கட்டணம் என்றாலும், ரூ.1 லட்சம் கட்டணத்தையும் கொடுக்க முன்வந்தனர்..

இதனிடையே, "இது இளைஞர்களுக்கான ஒரு உயர்மட்ட கூட்டம், இதில் நிர்வாணமாக கலந்து கொள்ளலாம்" என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சோஷியல் மீடியாவில் போஸ்டர் மூலம் அறிவிப்பு செய்யவும், இந்த விளம்பரமானது, சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது..

உடனே அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இந்நிகழ்ச்சிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினார்.. இதையடுத்து, இந்த நிகழ்ச்சி குறித்த விசாரணையை போலீசார் துவங்கியிருக்கிறார்கள்.. வரும் 21ம் தேதி பார்ட்டி நடத்தவிருந்த நிலையில், அது தொடர்பாக தற்போது 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+