தூய்மை பணியாளர்கள் இளைப்பாற ஓய்வறை.. இறையன்பு ஐஏஎஸ் பேரன்புடன் எழுதிய கடிதம்
சென்னை: அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பொது மக்களுக்கான ஓய்வறைகள் (Toilets) இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி ஓய்வறைகளே இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூஜை செய்து அவர்களைக் கௌரவப்படுத்துவது போன்ற நெகிழ்ச்சி சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறின. கொரோனா தொற்று எல்லோருக்கும் உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்டுவரும் சேவை மகத்தானது.
குப்பைகளை வெறும் கைகளால்தான் அவர்கள் அள்ளுகின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, சோப்பு போன்றவை முழுமையாக வழங்கப்படவில்லை. மருத்துவப் பரிசோதனை, நோய்த்தடுப்பு ஊசி போன்ற ஏற்பாடுகள் இல்லை. எந்தவித பாதுகாப்பும் இல்லாத சூழலில்தான் அவர்கள் வேலை செய்கிறார்கள். மருத்துவமனைகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் இன்னும் ஆபத்தான சூழலில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வறை எதுவும் இல்லை என்பதுதான் சோகம்.

இறையன்பு கடிதம்
இந்த நிலையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அரசு மருத்துவமனைகளிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைப்பது அவசியம் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.

எழில்மிகு அரசு அலுவலகம்
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், "எழில்மிகு அரசு அலுவலகம் என்ற சூழலை உருவாக்க அரசு அலுவலகங்களில் செலவின்றி மேற்கொள்ளப்பட வேண்டிய எளிமையான பணிகளைத் தெரிவித்து செயல்படுத்த கேட்டுக்கொண்டற்கிணங்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் மிக நேர்த்தியான முறையில் செயல்படுத்தி முந்தைய நிலையை தற்போதைய நிலையையும் நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அனுப்பி வைத்தமைக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தூய்மை பணியாளர்கள்
அதேபோல, நாம் அமர்ந்து பணியாற்றும் அரசு அலுவலகங்களையும் உபயோகப்படுத்தும் ஓய்வு அறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தி துலங்கசெய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உணவருந்தவும் நீர்ப் பருகவும் போதிய வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தனி கவனம் செலுத்தி தூய்மைப்பணியாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகளை ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை விரைந்து சமர்ப்பித்தமைக்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைப்பாற ஓர் அறை
மேற்சொன்ன வசதிகள் தங்கள் அலுவலகத்தோடு நில்லாமல் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் , அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர அரசு துணை அலுவலகங்களில் செயல்படுத்தும் முகத்தான் நேரடியாக தலையிட்டு தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் எழில்மிகு அரசு அலுவலகமாக திகழவும் அவ்வலுவலகத் தூய்மைப் பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாறவும் உணவருந்தவும் போதிய வசதிகளை அந்தந்த அரசு அலுவலகத் தலைமை அலுவலர்கள் மூலம் செய்து கொடுப்பதை உறுதி செய்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் ஒர் அறிக்கை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பொது மக்களுக்கு வசதி
மேலும் பொது மக்களுக்கான ஓய்வறைகள் (Toilets) இல்லாத அரசு அலுவலகங்களில் அதனை உடனடியாக ஏற்படுத்தி ஓய்வறைகளே இல்லாத அரசு அலுவலகங்கள் இல்லை என்ற சூழலை உருவாக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து ஆவணப்படுத்தி நிழற்படங்களுடன் கூடிய அறிக்கையை அரசுக்கு விரைந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications