பஸ் ஊழியர்கள் பென்சன்.. சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் முக்கிய உத்தரவு
சென்னை: பணியில் இருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஆயுட்கால சான்றிதழை பணிமனைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு பிறகு மாதா மாதம் சரியான முறையில் ஓய்வூதியம் பெறுவதற்கு தங்களுடைய ஆயுட்காலச் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கான ஆதாரமாக ஆயுட்கால சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அப்போதுதான் சரியான முறையில் ஓய்வூதிய தொகை ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் பணியில் இருந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஆயுட்கால சான்றிதழை பணிமனைகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஏறத்தாழ 19,652-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். ஏறத்தாழ 14,300-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்றுள்ளோருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வூதிய நிதி நம்பகத்தின் வாயிலாக, ஓய்வூதியமானது வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்காலச் சான்றிதழை ஏற்கனவே, நடைமுறையில் உள்ளவாறு தாங்கள் கடைசியாக பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலகம், பணிமனையிலேயே சமர்ப்பித்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்கள் வருகிற 2024-ம் ஆண்டிற்கான ஆயுட்காலச் சான்றிதழை, வரும் ஜனவரி 1-ந்தேதி தொடங்கி, மார்ச் 15-ந்தேதிக்குள்ளாக அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்க வரும்பொழுது, ஓய்வூதிய உத்தரவு ஆணை எடுத்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தலைமையகத்தில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் தலைமையகத்திலும், பட்டுலாஸ்சாலை தொழிற்கூடத்தில் (பி.ஆர்.டி.), மண்டல தொழிற்கூடத்தில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள், அந்தந்த அலுவலகத்தில் ஆயுட்கால சான்றிதழ் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கே.கே.நகர் பயணச்சீட்டு அச்சகத்தில் ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள். கே.கே.நகர் பணிமனையிலும், குரோம்பேட்டை பஸ் கூடுகட்டும் பிரிவில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் குரோம்பேட்டை-1 பணிமனையிலும் தங்களின் ஆயுட்கால சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விடுபட்டவர்கள் தலைமை அலுவலகத்தை அணுகி, தங்களின் ஆயுட்காலச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications