சட்டசபை தேர்தலில் “ரெக்கார்டு பிரேக்கிங்” காத்திருக்கு.. வாக்குப்பதிவு தாறுமாறாக உயர வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் என சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதால் வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் வரலாறு காணாத அளவில் இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73.63% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பரில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். விடுபட்ட நபர்களைச் சேர்ப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக 27.53 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்போது இறுதி வாக்காளர் பட்டியலில், நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74.07 லட்சமாக குறைந்திருக்கிறது. இதையடுத்து, 5.67 கோடி வாக்காளர்களைக் கொண்டு நடைபெறப் போகிறது தமிழக சட்டமன்றத் தேர்தல்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியாக இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 5.67 கோடியாக குறைந்துள்ளது, சமீபத்திய எஸ்ஐஆர் நடவடிக்கை மூலம் தமிழகத்தில் நீக்கப்பட்ட பெயர்களின் எண்ணிக்கை 74 லட்சம்.
2025 அக்டோபர் 25 ஆம் தேதி நிலவரப்படி, 6,41,14,587 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். சிறப்பு தீவிர திருத்தம் 2026-இன் (SIR) கீழ் கணக்கெடுப்பு கட்டம் முடிந்த பிறகு, மொத்தம் 5,43,76,756 வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட வரைவு பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது.
19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான காலத்தில், பலர் மீண்டும் விண்ணப்பித்தனர். பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்ய 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட்சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் பேர் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர். அதேபோல், இணையதளம் வழியாக 10 லட்சத்து 28 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். மொத்தமாக 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் 27.53 லட்சம் தகுதியுள்ள வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் 4.23 லட்சம் தகுதி பெறாத நபர்கள் நீக்கப்பட்டனர். தகுதியுள்ள வாக்காளர்களைக் கொண்ட 2026-ன் இறுதி வாக்காளர் பட்டியல் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலின்படி, தமிழகத்தில் மொத்தம் 5,67,07,380 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் 2,77,38,925, பெண் வாக்காளர்கள் - 2,89,60,838 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 7,617 நபர்கள் உள்ளனர்.
இன்றைய நிலவரப்படி, இதில் 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம், மாற்றுத் திறனாளிகள் எனக் குறிக்கப்பட்ட வாக்காளர்கள் 4.63 லட்சம் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் (85+ வயதினர்) 3.99 லட்சம்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தமிழ்நாட்டில் 6.29 கோடி வாக்காளர்கள் இருந்தனர். அப்போது 73.63% வாக்குகள் பதிவாகி இருந்தது. அதாவது 4.63 கோடி வாக்காளர்கள் வாக்களித்து இருந்தனர். இந்நிலையில் இரட்டை பதிவுகள், இறந்தவர்கள் என சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதால் வரும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications