எலான் மஸ்க் அறிவாளின்னு உலகத்தை ஏமாற்றிவிட்டார்.. கொதிக்கும் நெட்டிசன்ஸ்.. டிரெண்டான #RIPTwitter
சென்னை: ட்விட்டர் பயன்பாட்டில் அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் கொண்டு வந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் பலரும் அதை விமர்சனம் செய்து வருகின்றனர். இதை வைத்து #riptwitter என்றும் அவர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ட்விட்டர் விதிகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார். அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 1000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 500 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட அளவிற்கு டேட்டாக்களை எடுப்பதை எலான் மஸ்க் விரும்பவில்லையாம். இப்படி டேட்டாக்களை எடுத்து அதை வேறு இடங்களில் பயன்படுத்துவார்கள்.
உதாரணமாக ஒரு ஏஐ உருவாக்குகிறார்கள் என்றால்.. அதில் புதிய தகவல்களை அப்டேட் செய்ய இது போன்ற ட்விட்டர் தகவலை பீட் செய்வார்கள். இதனால் ஏஐ உலகில் உடனுக்குடன் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அது முழு அப்டேட்டுடன் இருக்க முடியும். இதைத்தான் டேட்டா ஸ்கிராப்பிங் என்பார்கள். இந்த டேட்டா ஸ்கிராப்பிங்கை தடுப்பதற்காக தற்காலிகமாக இந்த கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
AI நிறுவனங்கள் தங்கள் மாடல்களைப் பயிற்றுவிக்க ட்விட்டர் தரவைப் பயன்படுத்துவதை எலான் மஸ்க்கும் தனது போஸ்டுல் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இதை வைத்து #riptwitter என்றும் அவர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். நாங்கள் வேறு சமூக வலைத்தளங்களை பயன்படுத்த போகிறோம். இனி இன்ஸ்ட்ராகிராம் செல்ல போகிறோம்.

இந்த ட்விட்டர் நிறுவனம் செத்து விட்டது. இது டைட்டானிக் கப்பல் போல மூழ்கிவிட்டது. இனி இதில் இருக்க போவது இல்லை. எலான் மஸ்க் மிகப்பெரிய முட்டாளாக இருக்கிறார். ஆனால் அவர் உலகத்தை தான் அறிவாளி என்று காட்டி ஏமாற்றிவிட்டார். இந்த கட்டுப்பாடு காரணமாக இனி ட்விட்டரில் விளம்பரம் கொடுக்கும் நபர்களும் வெகுவாக குறைவார்கள் என்றும் நெட்டிசன்கள் போஸ்ட் செய்துள்ளனர்.
நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 6,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார்.

அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 600 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 300 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது என்றார். அதன்பின் இதை இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 8,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று அறிவித்துள்ளார்.

அதேபோல் வெரிபை செய்யாத பயனர்கள் 800 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும். அதே சமயம் ட்விட்டரில் புதிதாக இணையும் புதிய யூசர்களுக்கு 400 ட்விட் மட்டுமே பார்க்கும் வகையில் கட்டுப்பாடு உயர்த்தப்பட்டு உள்ளது என்றார். தற்போது இது முறையே 10000 , 1000, 500 என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications