மக்களே அலர்ட்.. சென்னையில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
சென்னை: சென்னையில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அட்மிட் ஆகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் எனவே மக்கள் கவனமாக இருக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவாக மழைக்காலம் தொடங்கிவிட்டாலே பருவ கால நோய்கள் அதிகரிப்பது வாடிக்கைதான். மழைக்காலத்தில் குளிர்ந்த நிலை நிலவுவதாலும், இது வைரஸ் பரவலுக்கு சாதகமான சூழல் என்பதாலும் எளிதில் காய்ச்சல், சளி போன்ற நோய்கள் பரவி விடுகிறது. குளிர்காலத்தில் வைரஸ்கள் எளிதில் நமது சுவாச பாதையை தாக்கக்கூடும். இதனால் இன்ஃப்ளூயன்சா, கொரோனா, ரெஸ்பிரேட்டரி சின்ஸியல் வைரஸ் போன்ற வைரஸ்களால் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது.

ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அவரிடம் இருந்து மழைக்காலங்களில் எளிதில் மற்றவர்களுக்கு பரவி விடுகிறது இன்புளூயன்ஸா, ரெஸ்பிரேட்டரி சின்சியல் வைரசால் ஏற்படும் நோய்கள் ஒரு வாரத்தில் குணமாகிவிடும். எனினும் இந்த 7 நாட்களிலும் தொண்டை வலி, மூக்கு ஒழுகல், லேசான தலைவலி, உடல் வலி, உடல் சோர்வு, இருமல் பாடாய்படுத்தி விடும். இது சாதாரண நோய்தான். ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
ஆனால், இந்த அறிகுறிகளுடன் கூடுதலாக மூச்சுவிடுவதில் சிரமம் இருத்தல், மூச்சுத்திணறல், பிதற்றல் நிலை, தலைச்சுற்று இருந்தால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தால் தீவிர வைரசாக இருக்கக்கூடும். எனவே உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்படி மழைக்கால நோய்கள் பாடாய்படுத்திக் கொண்டு இருக்க தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சலும் அதிகரித்து உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம்களையும் தமிழக அரசு நடத்தி வருகிறது. இது ஒருபக்கம் என்றால் தற்போது டைப்பாய்டு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேருக்கு டைபாய்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
டைப்பாய்டு என்பது பாக்டீரியா தொற்றினால் ஏற்படும் ஒரு வகை நோயாகும். சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியா என்ற ஒரு பாக்டீரியாவால் இது உண்டாகிறது. இந்த பாக்டீரியா உணவில் கலந்து உணவை கெட்டுப் போக வைக்கும் இந்த கெட்டுப்போன உணவை சாப்பிடுவதன் மூலம் உடலுக்குள் பரவி சில நேரங்களில் இது உயிர்க்கொல்லி நோயாகவும் மாறிவிடுகிறது. தரமற்ற குடிநீர், சுகாதாரமற்ற உணவு ஆகியவற்றால் இந்த நோய் பரவுகிறது.
உடல்சோர்வு, கடுமையான காய்ச்சல், வாந்தி, பசியின்மை, தலைவலி, தொண்டைவலி, உடலில் தடுப்புகள், வயிற்று உபாதைகள் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள் ஆகும். டைப்பாய்டு காய்ச்சலை பொறுத்தவரை ஆன்டிபயாட்டிக் மருந்து நிவாரணமாக உளது. . வீட்டிலேயே வைத்து மருத்துவரின் ஆலோசனையின் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுக்கலாம்.
இந்த மருந்துகளை எடுக்கத் தொடங்கிய 2 அல்லது 3 நாட்களுக்குள் அறிகுறிகள் குறைய துவங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும். காய்ச்சல் முழுவதுமாக குறையும் வரை முழு ஓய்வில் இருக்க வேண்டும், திரவ ஆகாரங்களை அதிகம் அருந்த வேண்டும். குறிப்பாக தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதாவது அடிக்கடி கைகளை கழுவததல், நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும். கெட்டுப்போன உணவை சாப்பிடக்கூடாது. கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்'போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications