சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தாக்கியவர்களுக்கு மாரடைப்பு ஆபத்து... தடுப்பூசிதான் ஒரே ஆயுதம் - ஆய்வாளர்கள்

கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்க வாதத்தால் பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதாக ஆராய்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தி லேன்செட் இதழில் இந்த ஆய்வு குறித்த வெளியாகி உள்ளது. தடுப்பூசி என்பது அபாயத்தை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதலே உலகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் 20 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் அலையில் அமெரிக்கா சிக்கியது. 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது இந்தியாவும் பிரேசிலும்தான்.

இந்தியாவில் கொரோனாவிற்கு மூன்று கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரேசில் நாட்டில் 2 கோடி பேர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டாலும் வைரஸ் பரவல் தினசரியும் பல லட்சம் பேரை பாதித்துக்கொண்டுதான் உள்ளது.

வாத்தி கம்மிங்.. செம ஆட்டம் போட்ட டேவிட் வார்னர்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்வாத்தி கம்மிங்.. செம ஆட்டம் போட்ட டேவிட் வார்னர்.. விஜய் ரசிகர்கள் உற்சாகம்

மாரடைப்பு ஆபத்து

மாரடைப்பு ஆபத்து

கொரோனா இரண்டாவது அலை இன்னமும் முடியவில்லை என்றும் விரைவில் மூன்றாவது அலை தாக்கக்கூடும் என்றும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் புதிய ஆய்வு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கிய இரண்டு வாரங்களில் அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்குவரை அதிகரித்துள்ளதாக தி லான்செட் இதழில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

பக்காவாதம் வரும் வாய்ப்பு

பக்காவாதம் வரும் வாய்ப்பு

ஸ்வீடன் நாட்டில் உள்ள உமேயா பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி 1 முதல் செப்டம்பர் 14 வரை மேற்கொண்டன ஆய்வு முடிவில் இது தெரியவந்துள்ளது. சுமார் 86 ஆயிரத்து 742 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா பாதித்த இரண்டு வாரங்களில் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

இதய பிரச்சினை

இதய பிரச்சினை

சமூக, பொருளாதார மற்றும் வயது, பாலின அடிப்படையில் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பின்னர் கடுமையான இருதய பிரச்சனைகளை பலர் சந்திப்பதாகவும் ஆராய்ச்சி முடிவு காட்டுவதாக ஆய்வில் இணை ஆசிரியரான உயேமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயோனிஸ் கட் சோலாரிஸ் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியின் முக்கியத்துவம்

தடுப்பூசியின் முக்கியத்துவம்


இதன் மூலம் குறிப்பாக முதியவர்களே அதிக அளவில் மாரடைப்பு, பக்கவாதத்திற்கு ஆளாவதாகவும் அவர் கூறினார். இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மிகப்பெரிய ஒரு சவாலானது என்றும் ஏற்கனவே பக்கவாதம் அல்லது மாரடைப்பு அறிகுறி உள்ளவர்கள் இந்த ஆய்வில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தங்களது முடிவுகள் காட்டுவதாகவும் ஆய்வாளர் கூறியுள்ளார்.

இரண்டு வகையான ஆய்வு முடிவு

இரண்டு வகையான ஆய்வு முடிவு

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் இரண்டு புள்ளிவிவர முறைகளைப் பயன்படுத்தியதாகவும், பொருந்திய கூட்டு ஆய்வு மற்றும் சுய-கட்டுப்பாட்டு வழக்கு தொடர் ஆய்வு என அவர் கூறினார். தடுப்பூசிகளைத் தொடர்ந்து சிக்கல்களின் அபாயத்தை தீர்மானிக்க முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முறை என்று அவர்கள் கூறினர்.
இரண்டு முறைகளும் கடுமையான மாரடைப்பு மற்றும் இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கிற்கு கோவிட் 19 ஒரு ஆபத்து காரணி என்று தெரிவித்த அவர், மொத்தத்தில் தடுப்பூசி என்பது அபாயத்தை தடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் என அவர் கூறியுள்ளார்.

அதிகரிக்கும் ஆபத்து

அதிகரிக்கும் ஆபத்து

இதுபற்றிய ஆய்வை நடத்திய உமேயா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒஸ்வால்டோ பொன்சேகா ரோட்ரிக்ஸ் கூறும்போது, கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு அதிகரித்து இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கண் பார்வை பாதிப்பு

கண் பார்வை பாதிப்பு

கொரோனா பாதித்தவர்களிடையே மியூகோர்மைகாசிஸ் என்னும் கருப்பு பூஞ்சையானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா தாக்கியவர்களை மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு மருத்துவர்களையும் கொரோனா பாதித்தவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

English summary
Research has shown that people with the corona virus have a higher risk of heart attack and stroke in two weeks. The study was published in The Lancet. The researchers also say that the vaccine is the biggest weapon to prevent risk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X