நாங்க எப்ப வந்தாலும் ஓசியில் பால் தரணும்.. ஊழியரை தாக்கி அட்டகாசம் செய்த ரவுடிகள்.. ஷாக் CCTV காட்சி
சென்னை: தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு வந்த ரவுடிகள் சிலர் 5 பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு அதற்கான பணம் தராமல் அடாவடி செய்துள்ளனர். மேலும், கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை தருமாறும் கூறி அந்த பாலகத்தில் பணியாற்றும் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆவின் நிறுவனம் 4 லட்சம் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 34 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளாக நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும், 2 லட்சம் லிட்டர் பால், ஆவின் நிறுவனத்தால் வெண்ணெய், பால் பவுடர் போன்ற உப பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்கள் மூலமாக பால் மற்றும் பால் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் பகுதியில் சண்முகவள்ளி என்பவர் ஆவின் பாலகம் நடத்தி வருகிறார். நேற்று இரவு கடைக்கு பால் வாங்க வந்த நபர்கள் 5 பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு அதற்கான பணம் தராமல் அடாவடி செய்துள்ளனர். மேலும், கடையில் இருந்த கல்லாப் பெட்டியில் உள்ள பணத்தை தருமாறும் கூறி அந்த பாலகத்தில் பணியாற்றும் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இனி நாங்கள் வரும் போதெல்லாம் பால் பாக்கெட்டுகளை இலவசமாக தர வேண்டும் இல்லை என்றால் நடப்பதே வேறு என மிரட்டிச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகவள்ளியின் கணவர் சாத்தையா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் ஆவின் பாலகத்தில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக பால் முகவர்கள் தொழிலாளர் சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு தாம்பரம், சேலையூர், மெப்பேடு சந்திப்பு பகுதியில் ஆவின் பாலகம் நடத்தி வரும் சண்முகவள்ளி (க/பெ மு.சாத்தையா) என்கிற பால் முகவரின் பாலகத்திற்கு நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பால் வாங்குவது போல் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட்டுகளை வாங்கி விட்டு கடையில் இருந்த பணத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் பணியில் இருந்தவர் மீது கொலைவெறி தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மேலும், நாங்கள் வரும் போதெல்லாம் பால் பாக்கெட்டுகளை இலவசமாக தர வேண்டும் இல்லையேல் நடப்பதே வேறு என மிரட்டிச் சென்றுள்ளனர். ஆவின் பாலகத்தில் பால் வாங்கிவிட்டு பணம் தராமல், ஊழியரை தாக்கிய ரவுடிகளின் சமூக விரோத செயல்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் சம்பந்தப்பட்ட ரவுடிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications