ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு! ரவுடி நாகேந்திரனை ஜெயிலில் வைத்தே தூக்கிய போலீஸ்.. சிறைக்குள் ட்விஸ்ட்
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு தொடர்பாக மற்றொரு வழக்கில் சிறையில் இருக்கும், ரவுடி நாகேந்திரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் தனக்கு வழங்கப்பட்ட கைது வாரண்டை நாகேந்திரன் கையெழுத்து போட்டு வாங்க மறுத்ததாகவும், இதனையடுத்து வாரண்ட் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது கொலைக்கு மூளையாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு செயல்பட்டதாகவும் போலீசார் கூறினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவின் வங்கி பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர் . அவரது ஆறு மாத வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை வங்கிகளிடம் இருந்து கேட்டு பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனால் இந்த கொலை வழக்கில் மேலும் சிலர் சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் பிரபல ரவுடியான திருவேங்கடம், திருநின்றவூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் அருள், திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட இலக்கிய அணி நிர்வாகியின் மகனான சதீஷ், திருநின்றவூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான செல்வராஜ், தாமாக மாநில மாணவர் அணி நிர்வாகியான ஹரிஹரன், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவரான அஞ்சலை, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப், விஜயகுமார், முகுந்தன், விக்னேஷ் உள்ளிட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லபப்ட்ட நிலையில், அவரைத் தவிர்த்து தற்போது வரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 21 பேர் சிறையில் இருந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் மேலும் ஒரு கைது நடவடிக்கையாக பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைதான அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவரது தந்தையும் பிரபல ரவுடியான நாகேந்திரனை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே மற்றொரு கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் ரவுடி நாகேந்திரனை கைது செய்யவதற்குண்டான ஆணையை வேலூர் சிறை நிர்வாகத்திடம் செம்பியம் போலீசார் வழங்கியுள்ளனர்.
ஆனால் தனக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், அதனால் தான் கைதாக மாட்டேன் எனக் கூறிய நாகேந்திரன், செம்பியன் போலீசார் வழங்கிய கைது வாரண்டை பெற்றுக் கொள்ள மாட்டேன் எனக் கூறி கையெழுத்திட மாட்டேன் என மறுத்துள்ளார். இதனையடுத்து நாகேந்திரனிம்ன் கைது வாரண்டை வேலூர் சிறைத் துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனையடுத்து நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் 24வது நபராக கைது ( ஃபார்மாலிட்டி அரெஸ்ட் ) செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாகேந்திரன் ஏன் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலூர் மத்திய சிறையில் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், அங்கிருந்தபடியே பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் கொலை சம்பவத்துக்கு திட்டம் வகுத்துக் கொடுத்திருக்கலாம் என்ற அனுமானத்தின் பேரிலேயே அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், கைதான நாகேந்திரனின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகள் சில போலீசாரிடம் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications