Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.1000 உரிமைத்தொகை நல்லதா? கெட்டதா? ‛மீன் ஸ்டோரி’ கூறி விளக்கிய அன்புமணி! ஆஹா! திரும்பும் திமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மகளிளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதுபற்றி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் கேட்டதற்கு அவர் குட்டி‛மீன் ஸ்டோரி' சொல்லி விளக்கியுள்ளார்.

சட்டசபை தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்ப தலைவிகளாக உள்ள மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது. இதையடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் தொடங்கியது.

Rs.1000 Mahalir Urimai Thogai scheme is a good? or bad? Anbumani Ramadoss explains with fish story

இந்நிலையில் தான் நேற்று முதல்வர் ஸ்டாலின் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டுள்ளது. இனி மாதந்தோறும் அவர்களின் வங்கி கணக்கு ரூ.1000 என்பது செலுத்தப்படும்.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக அரசு செயல்படுத்தி உள்ள குடும்ப தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் பற்றி கேள்வி கேட்டப்பட்டது. இதற்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து மீன் கதையுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

இது நல்ல திட்டம். வரவேற்கிறோம். இது ஒரு நலத்திட்டம். ஆனால் ஒரு நலத்திட்டம் மட்டுமே போதுமானது கிடையாது. வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வர வேண்டும். ஒருவருக்கு ஒரு மீனை கொடுத்தால் அவர் அன்றைக்கு அதனை சாப்பிடலாம். ஆனால் ஒருவருக்கு மீன் பிடிக்க கற்று கொடுத்தால் அவர் வாழ்நாள் முழுவதும் சாப்பிடலாம்.

இந்த நலத்திட்டம் என்பது மீன் கொடுப்பது போலானது தான். மீன்பிடிக்க கற்று கொடுக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும். நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைக்கு குறைந்தபட்சம் சுமார் ரூ.1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஆண்டுதோறும் ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தற்போது நாம் தண்ணீருக்காக கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கெஞ்சுகிறோம். தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு மழை உள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 950 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. சென்னையில் 1050 மில்லிமீட்டர் மழை பெய்கிறது. சென்னையை பொறுத்தவரை பெய்யும் மழையில் 70 சதவீத தண்ணீர் கடலுக்கு செல்கிறது. நீரை சேமித்தாலே வாழ்வாதாரம், விவசாயம், வேலைவாய்ப்பு பெருகும். அதனால் இதுபோன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மாறாக நலத்திட்டங்கள் கொண்டு வந்து பெருமையாக பேசுவது என்பது வேறு. அது அரசியல் செய்வது. நான் இந்த திட்டத்தை தப்பு சொல்லவில்லை. ஆனால் மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வாருங்கள் என கூறுகிறேன்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+