Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி 2024: தமிழகத்தில் ஜவுளி, தங்கம், பட்டாசு விற்பனை ரூ 60 ஆயிரம் கோடியை தாண்டியது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் துணி, பட்டாசு, இனிப்புகள், தங்கம் விற்பனை ரூ 60 ஆயிரம் கோடியை தாண்டியதாக தெரிகிறது. இதனால் பலதரப்பட்ட வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நாடு முழுவதும் தீப ஒளித் திருநாள் கடந்த வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் கொண்டாடப்பட்டது. கேதார கவுரி நோன்பு இருப்போருக்கு வியாழக்கிழமையும் நோன்பு இல்லாதவர்களுக்கு வெள்ளிக்கிழமையும் தீபாவளி கொண்டாடப்பட்டது.

diwali 2024 tamil nadu 2024

தீபாவளிக்கு புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு, காரம், மது, தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளின் வியாபாரம் கலைகட்டும். இந்த முறை வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பட்டாசு வியாபாரம் எங்கே இல்லாமல் போய்விடுமோ என வியாபாரிகள் அஞ்சினர்.

கடந்த புதன்கிழமை அன்றே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் பட்டாசு, துணிமணி வாங்க கடைத்தெருக்களுக்கு சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனினும் எல்லா இடங்களிலும் மழை இல்லாததால் தீபாவளி களைகட்டியது.

சென்னை மட்டுமில்லாமல் மதுரை, கோவை, சேலம், நெல்லை, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் விற்பனை படுஜோராக இருந்தது. ஆன்லைன் வர்த்தகமும் களை கட்டியது. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஆன்லைனில் அதிக அளவுக்கு வர்த்தகம் நடந்தது. ஈரோட்டில் சாலையோர கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட போதிலும் தமிழகத்தில் சாலையோர கடைகளிலும் விற்பனை விறுவிறுவென நடந்தது.

இந்த தீபாவளிக்கு ரூ 27 ஆயிரம் கோடிக்கு ஜவுளி விற்பனை நடந்ததாக கூறப்படுகிறது. அது போல் தீபாவளி என்றாலே இனிப்புகள்தான். இதற்காக பலர் கடைகளில் வாங்கியது, ஆர்டர் கொடுத்து செய்தது என இனிப்பு பலகாரங்கள் ரூ 10 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு சிக்கன், மட்டன் சாப்பிட ஆடு, கோழி விற்பனை ஜோராக இருந்தது. உளூந்தூர் பேட்டை, திருச்சி சமயபுரம், கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஜோலார்பேட்டை அடுத்த சந்தைக்கோடியூர், சேலம் மாவட்டம் வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் சுமார் ரூ.12 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.

அது போல் தங்கம் விலை சவரன் ரூ 60 ஆயிரத்தை நெருங்கிய நிலையிலும் தங்கம் விற்பனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தங்கம் மட்டுமில்லாமல் பிளாட்டினம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட நகைகளும் விற்பனையில் டாப்பாக இருந்தது. இவையெல்லாம் சேர்த்து ரூ 5 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியிருக்கும் என தெரிகிறது.

அது போல் பட்டாசு விற்பனை ரூ 6000 கோடிக்கு இருக்கும் என்றும் , இவை இல்லாமல் பூ, பழம், வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை என சேர்த்து ரூ 60 ஆயிரம் கோடியை தாண்டி விற்பனை நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அது போல் டாஸ்மாக்கில் மது விற்பனை அக்டோபர் 30, 31 ஆகிய தேதிகளில் ரூ 438 கோடி விற்பனை நடந்தது. இத கடந்த ஆண்டை காட்டிலும் ரூ 29 கோடி குறைவு என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+