சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூ. 7.37 கோடி கணக்கில் வராத பணம் : வருமான வரி வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் விடுவிப்பு

வருமான வரி வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை விடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்து விற்பனை மூலம் வருமானமாக கிடைத்த ரூ. 7.37 கோடி கணக்கில் காட்டவில்லை எனக்கூறி வருமான வரித்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோரை விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Recommended Video

    #BREAKING வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் கார்த்திக் சிதம்பரம்..!

    மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம், கடந்த 2015-ம் ஆண்டு முட்டுக்காடு பகுதியில் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களை தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர்.

    Rs. 7.37 crore unaccounted money: Karthi Chidambaram released from income tax case

    இதன் மூலம் கிடைத்த 7.37 கோடியை கணக்கில் காட்டவில்லை எனக்கூறி, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

    சென்னையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதை எதிர்த்தும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரியும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

    நச்சென 2 கண்டிஷன்கள்.. தேமுதிகவின் தடாலடி.. நச்சென 2 கண்டிஷன்கள்.. தேமுதிகவின் தடாலடி.. "ஓகே" சொல்லுமா அதிமுக அல்லது "ஸாரி"யா!?

    இந்த மனுக்களை நீதிபதி சதீஷ்குமார் விசாரித்தார். கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், வருமான வரி மதிப்பீட்டு நடைமுறைகளை முழுமையாக முடிக்கும் முன்னரே தங்களுக்கு எதிராக வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவிக்க வேண்டும் என வாதிட்டார்.

    அதேபோல வருமான வரித்துறை சார்பில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதியின் வாதத்தை ஏற்று இருவரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

    English summary
    Proceeds from the sale of the property amounted to Rs. The Chennai High Court has ordered the release of Congress MP Karthi Chidambaram and his wife Srinidhi from a case filed on behalf of the Income Tax Department alleging non-payment of Rs 7.37 crore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X