வாஷ் அவுட் ஆகுதா திமுக? ஆணி அடிச்சது போல உட்கார்ந்த ஆர்.எஸ். பாரதி.. விசிக கிட்ட தவெக கத்துக்கட்டும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் கூட்டத்தை நடத்த மாநில அரசிடம் அனுமதி கேட்டுவிட்டு, விசாரணையை மட்டும் டெல்லியில் செய்ய வேண்டுமா? பயத்தில்தான் இத்தனை கேஸ்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அரசியல் விமர்சகர் அய்யநாதன் தவெகவை விமர்சித்துள்ளார்.. மேலும் அது ஒரு கட்சியே இல்லை என்றும் சேனலுக்கு தந்துள்ள பேட்டியொன்றில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ் நிறம் என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் அய்யநாதன், யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்துவிட்டால் தன்னையே அர்ப்பணிக்க வேண்டும்.

RS Bharahi DMK

ஆனால் விஜய் அப்படிப்பட்ட ஆளே கிடையாது. இவர் வாரம் வாரம் அரசியல் செய்பவர்.. அதிலும் மார்னிங் ஷோ நாமக்கல், ஈவினிங் ஷோ கரூர், மேட்னி ஷோ நாகப்பட்டினம், ஈவினிங் ஷோ திருவாரூர் என்று அரசியல் நடத்தி கொண்டிருக்கிறார். இதெல்லாம் மக்களும் யோசிப்பார்கள். அப்படியிருக்கும் போது விஜய் முதலமைச்சர் ஆவாரா? என்று விவாதிப்பதுகூட வீண்தான்.

அங்கே பவன்குமார் ஆட்சிக்கு வந்துவிட்டதால், அதுபோலவே நாமும் வரவேண்டும் என்றுதான் தொண்டர்கள் ஆசைப்படுகிறார்கள்.. இதனால் கூட்டணிக்காக பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் காணாமல் போவது, டெல்லிக்கு ஓடுவது எல்லாமே. விஜய் கட்சி ஒரு பேனர் பார்ட்டி.. அமைப்பு ரீதியானதும் இல்லை.. அமைப்பு செயலாளரே இல்லாத ஒரு கட்சி என்றால் அது தவெகதான்.

ஆர் எஸ் பாரதி

அமைப்பு செயலாளர் இல்லாமல் ஒரு கட்சி இயங்கவே முடியாது. திமுக ஆபீசுக்குள் சென்றால் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி உட்கார்ந்திருப்பார்.. முழு நேரமும் ஆணி அடித்ததுபோல அங்கேயேதான் உட்கார்ந்திருப்பார்..

ஏனென்றால், அமைப்பு தொடர்பாக ஒவ்வொரு விஷயத்தையும் கட்சி தலைமைக்கு ரிப்போர்ட் செய்து கொண்டேயிருக்க வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் சென்று பார்த்தால் அமைப்பு என்பது எப்படியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், கடலில் திடீர்னு திமிங்கலம் மேலே வருவதுபோல, கேரவனிலிருந்து திடீர்னு தலையை நீட்டி வெளியே வருகிறார் விஜய்.. ரசிகர்களுக்கு ஒரு மயக்கம், மோகம், ஆர்வம் காரணமாக மேலே விழுகிறார்கள் என்றால் கட்சி தலைவனாகிய விஜய்க்கு பொறுப்பு இருக்கவேண்டும்தானே? ஒரு இடத்திலும் பொறுப்பாளியாக நடந்து கொள்ளவில்லையே,

தவெக துண்டு எங்கே

கரூருக்கு விஜய் வரும்போது தவெக துண்டுகளை அப்படி பறக்க விட்டாங்களே? அதே கரூர் மருத்துவமனையில் ஒரு தவெக துண்டுகளை கூட காணோமே? எங்கே அந்த கட்சி? வேல்முருகன், சீமான் போன்றோர்கள் எப்படி கட்சிகளை நடத்துகிறார்கள் என்று போய் பார்க்கட்டும்.
போகிற இடங்களில் முண்டியடித்து தள்ளும் கூட்டத்தை பார்த்து அமைதியாக இருங்க, என்று விஜய் சொன்னதே கிடையாது. கரூரில் கூட அதை சொல்லவில்லை. ஒரு ஷூட்டிங் போல அங்கே நடத்தியிருக்கிறார்கள்.

ஜனநாயகன் படத்துக்கு பயன்படுத்தி கொள்ள ஏதோ ஒரு ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது,., இல்லாவிட்டால் வெளியிலிருந்து அந்த அளவுக்கு கூட்டத்தை கூட்டி வந்திருக்க மாட்டார்கள். எஸ்டிஐ விசாரணையில் இவை யாவும் தெரிந்துவிடும்.. அதனால்தான் மாநில போலீஸ் வேண்டாம் என்று பயப்படுகிறார்கள் விஜய் தரப்பில்.

திமுக வாஷ் அவுட்?

கரூரில் கூட்டத்தை நடத்த மாநில அரசிடம் அனுமதி கேட்டுவிட்டு, விசாரணையை மட்டும் டெல்லியில் செய்ய வேண்டுமா? தங்கள் மீதான பயத்தில்தான் இத்தனை கேஸ்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தவெக, அதிமுக, பாஜக இந்த மூன்றும் ஒன்றும் சேர்ந்தால் திமுக வாஷ் அவுட் ஆகிவிடும் என்று கிளப்பிவிடுகிறார்கள்.. முதலில் இவர்கள் 3 பேரும் ஒன்று சேர்ந்தால், மக்களே இவர்களை விட்டு ஓடிவிடுவார்கள் என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+