தேனியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.1 கோடி.. பேங்க் அக்கவுண்ட்டை பார்த்து கிறுகிறுத்த விவசாயி மணிகண்டன்
சென்னை: விவசாயிகளின் வங்கி கணக்கில், பிஎம் பிஎம்-கிசான் (PM-KISAN) திட்டத்தின் 20வது தவணை ஆகஸ்ட் 2ம் தேதி விடுவிக்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, நிலம் வைத்திருக்கும் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவியாக 3 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை 19 தவணைகள் மூலம் ரூ.3.69 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக பரிமாறப்பட்டுள்ளது. இப்போது 20வது தவணையில் மட்டும் 9.7 கோடி விவசாயர்களுக்கு ரூ.20,500 கோடி டிபிஎம் முறையில் அனுப்பப்படவுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், தேனி விவசாயி ஒருவருக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்தது.. அதாவது அங்குள்ள அஜ்மீர் மாவட்டம், கிஷன்கர் பகுதியில் உள்ளது சோட்டா லம்பா என்ற கிராமம்.. இங்கு வசித்து வரும் விவசாயியின் பெயர் கனராம்.. இவரது பாங்க் ஆஃப் பரோடா வங்கிக்கணக்கில் ரூ.16 லட்சம் தொகை தவறாக டெபாசிட் செய்யப்பட்டுவிட்டது..

ரூ.15 லட்சம் வங்கி கணக்கில்
அதாவது, இந்தத் தொகை நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பயிர் காப்பீட்டு பிரீமியம் ஆகும். ஆனால் தவறுதலாக கனராமின் வங்கி கணக்கு டெபாசிட் ஆகிவிட்டது. இதனால், பாங்க் ஆப் பரோடா மேனேஜர், விவசாயி கனராமை தொடர்கொண்டு, தங்களது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர்..
ஆனால் கனராம் அதிலிருந்து ரூ.15 லட்சத்தை எடுத்ததோடு, வங்கி அதிகாரிகள் கேட்டபோது தர மறுத்துள்ளார்.. இதனால், அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர், இதுகுறித்து போலீசில் புகார் தந்ததும், அதுசம்பந்தமான விசாரணையை காவல்துறை மேற்கொண்டதும் நினைவிருக்கலாம்.
விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் இப்படி தவறுதலாக பணம் செலுத்திவிடுவது, பல முறை, பல மாநிலங்களில் நடந்துள்ளது.. அதுபோலத்தான், நம்முடைய தேனி மாவட்டத்திலும் ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது..
தேனி விவசாயிக்கு ரூ.1 கோடி டெபாசிட்
தேனி உத்தமபாளையம் தாலுகா காமையகவுண்டன்பட்டி கருப்பணன் செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்.. இவருக்கு 34 வயதாகிறது.. விவசாய கூலித் தொழிலாளி ஆவார்..
இவருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் ஏலத் தோட்டம் கேரள மாநிலம் உடும்பன்சோலையில் உள்ளது.. இந்நிலையில் தேனி வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து மணிகண்டனுக்கு திடீரென ஒரு நோட்டீஸ் வந்துள்ளது..
கோடிக்கணக்கில் டெபாசிட்
அந்த நோட்டீஸில், "உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 41 ஆயிரம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு 69 அ-வின்படி இது குறித்து நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டியது கடமையாகும். எனவே தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்ததுமே மணிகண்டனுக்கு தூக்கி வாரிப்போட்டது.. உடனே தன்னுடைய வங்கி கணக்கை சோதனை செய்தார்.. அப்போதுதான், கோடிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்..
விளக்கம் தந்த மணிகண்டன்
உடனே தேனி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்ற மணிகண்டன், நோட்டீஸ் வரும்வரை, இந்த தொகை தன்னுடைய வங்கி கணக்கில் எப்படி வந்ததே என்று தெரியவில்லை.. இந்த பண பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று விளக்கம் தந்தார்..
இப்படித்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவறுதலாக பலரது வங்கி கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு பிறகு அந்த பணம் விடுவிக்கப்பட்டது. அதுபோலவே, இப்போதும் தவறுதலாக பணம் வரவு வைக்கப்பட்டதா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications