அக்கவுண்ட்டில் ரூ.1000 வந்துடுச்சா.. பளபளன்னு முகம்.. ராஜேஸ்வரி பிரியா பேச பேச.. திமுகவுக்கு டென்ஷன்
சென்னை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேசிய பேச்சு, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. இதற்கு எதிர்க்கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்து, கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
வேலூர் தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவினாலும், தேர்தல் களம் என்னவோ கதிர்ஆனந்த் Vs ஏசி சண்முகம் ஆகியோருக்கான போட்டியாகவே காணப்படுகிறது.. இவர்கள் 2 பேரின் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுகவும் இருக்கும் என்பதை மறுக்க முடியாது..
கடந்த முறை தேர்தலில், அதிமுகவும், பாஜகவும் ஒரே அணியிலிருந்தே போட்டியிட்டன.. அப்போது தேர்தல் களத்தில் பிரதமர் மோடி எதிர்ப்பு அலையே, திமுகவின் வெற்றிக்கு பிரதான காரணமாக இருந்தன என்பதற்கு, வேலூர் தொகுதியே மிகச்சிறந்த உதாரணமாகும்..

வேலூர்: திமுகவை பொறுத்தவரை இந்த முறையும், இரண்டாவதாக கதிர்ஆனந்துக்கு வாய்ப்பு தந்துள்ளது.. லோக்கல் பாலிட்டிக்ஸ் தொகுதியில் பீறிட்டு எழுந்தாலும், அனைத்தையும் சமாளித்து, மகனுக்கு சீட் வாங்கி தந்துள்ளார் மூத்த தலைவர் துரைமுருகன். தன்னுடைய மொத்த அரசியல் வியூகங்களையும் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியும் வருகிறார்.
இயல்பாகவே, துரைமுருகன் உணர்ச்சிவசப்படக்கூடியவர்.. அழுகையோ, சிரிப்போ, கோபமோ, எதுவானாலும் உடனுக்குடன் வெளிப்படுத்தக்கூடியவர்.. அதிலும், தன்னுடைய மகன் தேர்தல் களத்தில் நிற்கிறார் என்றாலே, துரைமுருகன் சற்று கூடுதலாகவே எமோஷனல் ஆகிவிடுவார்.. கடந்த முறை தேர்தலின்போதும், வேலூர் மக்களிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதார் துரைமுருகன். "வேலூர் தொகுதி மக்களுக்கு என் மகனை தத்துக்கொடுக்கிறேன். இனிமேல் அவர், அவர், உங்கள் வீட்டுப் பிள்ளை" என்றார்.
வேட்பாளர்: இந்த முறை வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும், மறுபடியும் கண்ணீர் விட்டு அழுதார் துரைமுருகன்.. "மிசாவில் என் மகனை தொடக்கூட முடியாமல் தடுத்துவிட்டார்கள்" என்று மனமுருகி பேசினார்.. கடந்த மக்களவைத்தேர்தல், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனக்கும், தன்னுடைய மகனுக்கும் ஏற்பட்ட நிலை இந்த தேர்தலில் வரக்கூடாது என்பதில் துரைமுருகன் உறுதியாக உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
தன்னுடைய மகனின் வெற்றிக்காக துரைமுருகன் இப்படியெல்லாம் பாடுபட்டு வரும்போது, அனைத்து வியூகங்களையும் கதிர் ஆனந்த் சிதறடித்து விடுவதாக பொருமல்கள் வெடிக்க துவங்கியிருக்கின்றன.. காரணம், வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கதிர் ஆனந்த், திமுக செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசியது தற்போது சர்ச்சையக வெடித்துள்ளது.
வாக்கு சேகரிப்பு: குறிப்பாக வாக்கு சேகரிக்கும் இடத்திலிருந்த பெண்களை பார்த்து, "மேடையில் இருந்து பார்த்தால் சுற்றியுள்ள பெண்களின் முகம் எல்லாம் பளபளவென்று தெரிகிறது. என்னவென்று தெரியவில்லை எல்லோரும் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க..? என்ன காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகையாக 1000 ரூபாய் செலுத்தியது வந்துவிட்டதா" என்று கேட்டார்.
அதாவது, முதல்வர் செலுத்திய மகளிர் உரிமைத்தொகையில் தான், பெண்கள் பவுடர் போட்டுக்கொண்டு பளபளவென்று இருப்பது போல திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது...
பொன்முடி: இப்படித்தான், ஏற்கனவே ஒருமுறை அமைச்சர் பொன்முடி, "மகளிர் எல்லாம் ஓசி பஸ்ஸில்தான் போறீங்க" என்று சொல்லி பரபரப்பை கிளப்பியிருந்தார்.. இப்போது, கதிர் ஆனந்த்தும் இதுபோல பேசி, திமுகவிற்கு சங்கடத்தை தந்துள்ளார்.
பொன்முடி அப்போது பேசியதற்கும்சரி, இப்போது கதிர் ஆனந்த் பேசியதற்கும் சரி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தந்துள்ளது.. அந்தவகையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவரும், சமீபத்தில் அதிமுகவுக்கு தன்னுடைய அபரிமிதமான ஆதரவை அள்ளித்தந்தவருமான, ராஜேஸ்வரி பிரியாவும், கதிர் ஆனந்த் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அருவருப்பு பேச்சு: "பெண்களை இழிவு செய்வதனை திமுக நிறுத்திகொள்ள வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின்போது, கதிர் ஆனந்த் துரைமுருகனின், 1000ரூ பற்றிய பேச்சு கண்டிக்கதக்கது. அவர் பேசியது "மேடையிலிருந்து பெண்களின் முகத்தை பார்த்தால் பளபளன்னு இருந்தது பவுடர், ஃபேர்&லவ்லி, சிங்கார் குங்குமம் என்று பளபளன்னு இருந்துச்சு ..,1000ரூ வந்துச்சா?1000ரூ வந்துச்சா?" என்ற கேலி பேச்சு அருவருக்கதக்கது.
உங்கள் அப்பா கல்லூரி பெண்களுக்கான 1000ரூ பயன்படுத்தி யாரிடம் வேண்டுமானாலும் போன் பேசலாம், ஊர் சுற்றலாம் என்றார்.பெண்கள் என்றால் உங்கள் பார்வையில் யார்? மேக்கப் போட்டுகொண்டு கண்டவர்களிடம் போன் பேசுபவர்களா? பெண்களுக்கு சுயமரியாதை இல்லை என்று நினைக்க வேண்டாம் . விரைவில் பாடம் கற்பிக்கப்படும்" என்று கொந்தளித்துள்ளார்.
பெண்கள் நலன்: ராஜேஸ்வரி பிரியாவை பொறுத்தவரை, பெண்களின் நலனுக்காகவும், அவர்களின் முன்னேற்றத்துக்காகவும் பேசிவருபவர்.. கலாச்சார சீர்கேடுகள் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை வேரூடன் அழிக்க வேண்டும் என்று நினைப்பவர்.. எனவேதான், பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் கதிர் ஆனந்த் பேச்சுவரை, தன்னுடைய கண்டனத்தை வலிய பதிவு செய்து வருகிறார்.
ஏற்கனவே, திமுக அரசின் செயல்பாடுகளை லிஸ்ட் போட்டு விமர்சித்து வரும் நிலையில், நேற்றைய தினமும் ராஜேஸ்வரி பிரியா ஒரு சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியானது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
புதிய நபர்கள்: ராஜேஸ்வரி பிரியா அதில் கேட்கிறார், "தமிழகத்திலேயே மிகப்பெரிய தொகுதி கோவை.. இந்த தொகுதியில், திமுகவுக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுக்காமல், அறிமுகம் இல்லாத புதிய நபருக்கு ஏன் வாய்ப்பு தர வேண்டும்? இளைஞர்களுக்கு வாய்ப்பு தருகிறோம் என்கிறார்களே, உதயநிதிக்கே இப்ப 47 வயசாகுது.. 40 வயதுக்கு குறைவானவர்களுக்கு எம்பி சீட் தந்திருக்காங்களா?
ஆனால், அதிமுகவில் 3 பேருக்கு இளைஞர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. ஆனால், இளைஞர்களுக்கான அரசியலை திமுக முன்னெடுக்கிறதா? 33 சதவீத என்பதை தவறாக புரிந்துகொண்டு, "வாரிசு"களுக்கான இடஒதுக்கீடாக திமுக செயல்படுத்துகிறது.
நறுக் கேள்வி: மத்திய சென்னை, வடசென்னை, தென் சென்னை, இந்த 3 தொகுதிகளுமே, திமுகவின் மிக நெருங்கிய வாரிசுகளுக்கு சென்றிருக்கிறது.. இதற்கு என்ன காரணம்?
சென்னை என்பது மாநகரமாகும்.. தமிழகத்தின் தலைநகரம்.. இங்கு வரக்கூடிய பணமாகட்டும், ஒதுக்கக்கூடிய நிதியாகட்டும், அனைத்துமே உங்களுக்குள்ளேயே இருக்க வேண்டும், ஊழல் செய்தாலும் உங்களுக்குள்ளேயே வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, திமுக தலைவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இந்த சீட்களை தந்துள்ளார்களா? என்பதெல்லாம் மக்களின் சந்தேகமாக உள்ளதால், திமுக இதற்கு பதில் சொல்லுமா?" என்று நறுக் நறுக்கென கேட்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications