யார் யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது.. வருமான வரியா? விரைவில் வருகிறது தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு
சென்னை: பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன.. அத்துடன், எப்போது பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என்பது குறித்தும் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உறுதிசெய்துள்ளார்.
மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிகிறது.. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டும் உள்ளது..
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், நடைபாதையில் வணிகம் செய்திடும் பெண்கள், மீனவ பெண்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் பணிபுரியக் கூடிய பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதியோர்கள் பலர் இந்த திட்டத்தில் பயன் அடைய போகிறார்கள்.

குடும்ப தலைவிகள்: ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாத சம்பளம் அதிகம் வாங்குபவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது. ஒவ்வொரு குடும்பத்தலைவியின் வங்கி கணக்கில் ரூ.1000 பணம் கிடைக்கும் வகையில் அரசு 1 கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.. எனவே, இந்த பணம் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு சென்றடையும் வகையில் விதிமுறைகளும் வகுக்கப்படுகின்றன.
அதனால்தான், நேற்று முன்தினம், இதற்கான ஆலோசனை கூட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் நடத்தியிருந்தார்.. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளை தேர்வு செய்வது, அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்ப்பது, வயது வரம்பு நிர்ணயிக்கப்படுவது உள்ளிட்ட நிறைய விஷயங்கள் நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது..
நெறிமுறைகள்: அந்த நெறிமுறைகள் வந்தபிறகுதான், ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.. விண்ணப்பிக்கும்போது, அந்த மனுக்களை பரிசீலனை செய்து தகுதியான மகளிருக்கு, ரூ.1000 பணம், அவரவர் அக்கவுண்ட்டில் போய் சேர்ந்துவிடுமாம்.. மொத்தத்தில், தகுதியானவர்கள் யார் என்பதை வைத்தும், ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்தும் பணம் வழங்கப்படும் என தெரிகிறது..
குடும்ப தலைவிகளின் வயதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.. அதாவது 30 வயதுக்கு மேற்பட்ட குடும்பத்தலைவிகளே இந்த திட்டத்தின் பயனாளர்களாக சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது..
கண்டிஷன்: அதேபோல, வருமான வரி செலுத்தாதவர்கள் என்ற கண்டிஷன் முக்கியமாக இடம்பெறும் என்றும் சொல்கிறார்கள்.. மேலும், சொந்த நிலம் இருக்கிறதா? என்பதும் கணக்கில் கொள்ளப்படுமாம்.. வரும் செப்டம்பர் 15-ல் உரிமை தொகை அளிக்க முதல்வர் முடிவு செய்துள்ளார் என்று இன்றைய தினம் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளதால், வழிகாட்டு விரைவில் வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications