குழிக்குள் இடம் பத்தாமல் அப்பா காலை வெட்டிய மகன்.. ரூ.1.50 கோடி சொத்து, பரிசு! வீட்டில் புதைத்த உறவு
சென்னை: கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டத்தில் உள்ள கொட்டூர் நகரில், சொந்த குடும்பத்தையே இளைஞர் ஒருவர் படுகொலை செய்திருக்கிறார்.. படுபயங்கரமான இந்த கொலைகளையும் செய்துவிட்டு, அந்த சடலங்களை புதைக்க, இளைஞர் மேற்கொண்ட முயற்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.. இதுதொடர்பான விசாரணையையும் போலீசார் நடத்தி வருகிறார்கள்..
சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் அக்ஷய் குமார்.. 27 வயதாகிறது.. இவரது அப்பா பீம்ராஜ் (53), தாய் ஜெயலட்சுமி (50) மற்றும் தங்கை அம்ருதா (17) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்..இவர்கள் அனைவரும் கொட்டூரில் ஒரு வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு, டயர் ரீட்ரெடிங் தொழில் செய்து வந்துள்ளார்கள்.. ஆனால் கடந்த ஜனவரி 27-ம் தேதி, வீட்டில் தனியாக ஜெயலட்சுமி இருந்துள்ளார்.. அப்போது அவரது கழுத்தை அக்ஷய் குமார் முதலில் அறுத்து கொன்றுவிட்டார்.

பரிசு தேடிய தங்கை
பிறகு தன்னுடைய அம்ருதாவுக்கு போன் செய்துள்ளார்.. உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வைத்திருக்கிறேன், வீட்டுக்கு வா என்று அழைத்துள்ளார்.. சிறுமியும் பரிசுக்காக ஆசையாக வீட்டிற்கு வந்துள்ளார்..உடனே அந்த சிறுமியையும் கத்தியால் குத்திக் கொலை செய்து, தாயின் சடலத்துக்கு அருகிலேயே போட்டுள்ளார்.இது எதுவுமே தெரியாமல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார் அப்பா பீம்ராஜ்.. முகம், கை கால் கழுவிவிட்டு, டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாராம்.. உடனே அப்பாவையும் , பின்னால் இருந்து தாக்கி அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் அக்ஷய் குமார் .
வீட்டில் தோண்ட தோண்ட
இறுதியில் வீட்டிற்குள்ளேயே பெரிய குழி தோண்டி, முதலில் அம்மா, அதன் மேல் தங்கை, இறுதியாக தந்தை என மூவரின் உடல்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு மூடி மறைத்துள்ளார்.தன்னை யாரும் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக, அக்ஷய் குமார் ஒரு பெரிய பிளானை போட்டார்.. பெங்களூரு திலக் நகர் போலீசுக்கு சென்று புகார் தந்தார்..அதில், "என்னுடைய அப்பா சிகிச்சைக்காக தாய் மற்றும் தங்கையுடன் பெங்களூரு வந்திருந்தார்.. உறவினரிடம் கொடுக்க 4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வந்த அவர்கள் திடீரென மாயமாகிவிட்டனர்.. இதை எனக்கு வாட்ஸ்அப்பில் போட்டோவிலும் அனுப்பி வைத்தனர். ஆனால் அதற்கு பிறகு அவர்களது போன் அணைக்கப்பட்டுவிட்டது என்று கூறி போலீசாரை திசை திருப்ப முயன்றார்.
ரூ.1.5 கோடி சொத்து
ஆனால், அக்ஷய் குமாரின் பேச்சில் இருந்த குளறுபடிகளால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். நீண்ட நேர விசாரணைக்கு பிறகு, மனமுடைந்த அக்ஷய் குமார், தனது பெற்றோர் மற்றும் தங்கையை தானே கொலை செய்து வீட்டில் புதைத்த உண்மையை ஒப்புக்கொண்டார்.தகவல் அறிந்த விஜயநகர மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜானவி மற்றும் போலீசார், அக்ஷய் குமாரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றனர். அவர் அடையாளம் காட்டிய இடத்தில் தோண்டி பார்த்தபோது, மூன்று உடல்களும் மீட்கப்பட்டன.அந்த உடல்கள் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அக்ஷய் குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்..
வாக்குமூலம்
அப்போது அவர் வாக்குமூலத்தில் சொல்லும்போது, தங்கை அம்ருதா வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து, 3 மாத கர்ப்பமாகி விட்டாராம்.. உடனே அந்த காதலனுடனேயே அம்ருதாவை திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இது அக்ஷய் குமாருக்கு பிடிக்கவில்லை. வேறு சாதி நபரை திருமணம் முடித்தால், குடும்ப மானம் போய்விடும் என்று நினைத்து, பெற்றோரிடம் இந்த திருமணம் வேண்டாம் என்று சொல்லி உள்ளார்..ஆனால் பெற்றோரும், தங்கையும் பிடிவாதமாக இருந்ததால் 3 பேரையும் கொல்ல முடிவெடுத்துள்ளார்.. 3 பேரையுமே கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்..அதுமட்டுமல்ல, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அக்ஷய் குமார் தனது தந்தை வீட்டை விற்பனை செய்து வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாயை அவரிடம் கேட்டு தகராறு செய்து வந்தாராம்.. ஆனால் சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிடுவாய் என்று சொல்லி பணத்தை தர அப்பா மறுத்துள்ளார்.. இந்த கோபமும் அக்ஷய் குமாருக்கு இருந்துள்ளது.. அதனால்தான் 3 பேரையுமே கொலை செய்துவிட்டதாக வாக்குமூலம் தந்துள்ளார்..
அப்பா காலை வெட்டி
ஒரு இளைஞர் தனது ரத்த உறவுகளையே இவ்வளவு கொடூரமாக கொல்ல முடியுமா என்று போலீசார் அதிர்ச்சியில் உள்ளனர்.. அதிலும் வீட்டில் புதைக்கப்பட்ட குழியில் இருந்து அப்பாவின் உடலை வெளியே எடுத்த போது அவரது கால்கள் துண்டிக்கப்பட்டு இருந்ததாம்..இதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசார் கேட்டதற்கு, குழிக்குள் சடலத்தை வைக்க முடியாததால் அப்பாவின் கால்களை வெட்டி, அதே குழியில் போட்டேன்" என்று கூலாக சொல்கிறாராம் அக்ஷய் குமார்..!!
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப்












Click it and Unblock the Notifications