Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகை வீட்டுதாரரர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. வீடு கட்ட ரூ.2.50 லட்சம் நிதியுதவி! செம பிஎம் ஆவாஸ் யோஜனா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கு மத்திய அரசு சூப்பர் சான்ஸ் ஒன்றை தந்துள்ளது.. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீடு செல்ல விரும்புவோருக்கு கையில் பணமில்லாத நிலையில், மத்திய அரசு நிதியுதவி வழங்கி சிறப்பிக்கிறது.. அனைவருக்கும் வீடு என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு தொடங்கிய நிலையில், அத்திட்டத்தின் அடுத்தக்கட்ட விரிவாக்கமும் துவங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற பகுதிகளில், ஏழை மக்களுக்கு, மாநில அரசுடன் சேர்ந்து, வீடுகளை கட்டி தருவதே பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.. இதற்காகவே PMAY அதாவது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் துவங்கப்பட்டது..

pm awas yojana housing scheme angikar 2025 campaign 2025

நிலமுள்ள மக்கள் வீடு கட்ட மானியம் வழங்குவது, வங்கிக்கடனில் வீடு வாங்குவோருக்கு, வட்டியில் மானியம் வழங்குவது போன்றவற்றையும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 2.81 கோடி வீடுகள் ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், 29.07.2025 நிலவரப்படி, 4.12 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்கை (கட்டம் I + கட்டம் II) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது.. இதனடிப்படையில், மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 3.84 கோடி பயனாளிகளுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்

அனைவருக்கும் வீடு என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை மத்திய அரசு துவங்கி, 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வீடு கட்ட தலா ரூ.2.5 லட்சம் நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டது.. பிறகு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நகர்ப்புற வீட்டு வசதி 2.0 திட்டத்தை மத்திய அரசு துவங்கியது.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டதின் கீழ் 1.20 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 94.11 லட்சம் உறுதியான வீடுகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளைக் கட்டி முடிக்கவே இந்த "அங்கிகார் 2025" என்ற என்ற பிரச்சாரத்தை மத்திய அரசு துவங்கியிருக்கிறது.

அங்கிகார் 2025 பிரச்சாரம்

அதாவது, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டத்தின் விரிவாக்கமே இந்த 'அங்கிகார் 2025' பிரச்சாரமாகும்.. இந்த பிரச்சாரத்தின் மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை தந்து, வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, அதேபோல, குறைந்த வருமான பிரிவினருக்கு வீட்டுவசதிக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை திட்டம் குறித்தும் இந்த பிரச்சாரத்தின் மூலம் தெரிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த "அங்கிகார் 2025" பிரச்சார திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் மனோகர் லால் நேற்று முன்தினம் டெல்லியில் துவக்கி வைத்தார். அதன்படி, நாடு முழுவதும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஆரம்பமாகியிருக்கிறது..

வீடு வீடாக விழிப்புணர்வு

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அனைவருக்கும் வீடு' என்ற குறிக்கோளுடன் இணைந்து, இந்தத் திட்டம் புதுப்பிக்கப்பட்டு, கடந்த 2024 செப்டம்பரில் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0 ஆகத் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், நகர்ப்புற இந்தியாவின் ஒரு கோடி கூடுதல் குடும்பங்கள் நகரங்களில் ஒரு உறுதியான வீடு கட்ட அல்லது வாங்க அரசால் ரூ.2.50 லட்சம் வரை நிதி உதவியைப் பெறும்.

அங்கிகார் 2025 செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 31 வரை இரண்டு மாத காலத்திற்கு நாட்டில் உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும். நாடு முழுவதும் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் பிற தொடர்பு ஊடகங்கள் மற்றும் சமூக அணிதிரட்டல் மூலம் இது செயல்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+