ஜெகஜால கில்லாடி.. ரூ.500 ரூபாய் "மந்திர நோட்டு".. தொட்டாலே ரூ.5000 கொட்டும்! சென்னை வங்கியில் பரபர
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.. இதுகுறித்து போலீசாரும் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபகாலமாகவே, பிரபல வங்கிகளின் பெயர்களை சொல்லி, மோசடி வேலைகள் அதிகமாகி கொண்டிருக்கின்றன. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த விவரங்களை ரகசியமாக வைக்க வேண்டும் என்று வங்கிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

மோசடிகள்: அதுமட்டுமல்ல, யாரிடமும் வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும் மோசடியாளர்கள் புதுவிதமான வகையில் அணுகலாம் என்றும் வங்கிகள் வார்னிங் தந்து வருகின்றன.
அதேபோல இன்னொரு பக்கம் சைபர் கிரைம் போலீசாரும், பொதுமக்களை அலர்ட் செய்து வருகிறார்கள்.. எந்த வங்கியிலிருந்தும், ஒருபோதும் ஓடிபி-யை யாருமே கேட்க மாட்டார்கள். அதனால், யாராவது உங்கள் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு வந்த ரகசிய எண்ணை கேட்டால், தெரிவிக்க வேண்டாம்.. அவர்களது இணைப்பையும் துண்டித்துவிடுங்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.
மோசடிகள்: ஆனாலும், மோசடிகளின் எண்ணிக்கை பெருகியபடியே உள்ளது.. இதோ இப்போது ஒரு மோசடி சென்னையில் நடந்துள்ளது.. ஆனால், இதுவரை நடக்காத புது மோசடியாக இது இருக்கிறது.
சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறா வினோத்... இவர் ஒரு தொழிலாளி., திருமணமாகிவிட்டது. மனைவி பெயர் ரஞ்சினி... இவரும் அந்த பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
கவர்ச்சி விளம்பரம்: இந்நிலையில், வினோத் தன்னுடைய செல்போனில் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்து கொண்டிருந்தார்.. அப்போது அதில் " 500 ரூபாய் மந்திர நோட்டை தொட்டு வெற்றி பெறுங்கள். ரூ.5 ஆயிரம் கேஷ் பேக் பெறுங்கள்" என்று விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டுள்ளது.
இந்த கவர்ச்சி விளம்பரத்தை பார்த்ததுமே வினோத்துக்கு சபலம் வந்துவிட்டது.500 ரூபாய்க்கு, 5000 ரூபாயா? என்று ஆச்சரியப்பட்டுள்ளார். அத்துடன் அந்த பணத்துக்கும் ஆசைப்பட்டு, அந்த ஃபேஸ்புக் லிங்க்கை வினோத் கிளிக் செய்தார்.. உடனடியாக அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.. அதில், "உங்களது வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் அனுப்பப்பட்டு விட்டது" என்று அந்த மெசேஜ்ஜில் இருந்தது.
வினோத்: இதை பார்த்ததுமே வினோத்துக்கு குஷியாகிவிட்டது.. உடனே தன்னுடைய பேங்க் அக்கவுண்ட்டில் 5000 ரூபாய் வந்திருக்கிறதா? என்று பார்த்தார்.. செல்போனில் பேங்க் பேலன்ஸ் பார்த்தபோது, அதில், ரூ. 4650 பணம் மாயமாகியிருந்தது.. பேங்க்கில் இருந்த பணம் மொத்தமாக எடுக்கப்பட்டு, இன்னொரு வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டதாக இன்னொரு மெசேஜ் வினோத்துக்கு வந்துள்ளது.
அப்போதுதான், தான் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்த வினோத், உடனடியாக ஆதம்பாக்கம் போலீசுக்கு ஓடினார்.. இதுகுறித்து புகார் செய்ததையடுத்து, போலீசாரும், வினோத் கிளிக் செய்த அந்த முகநூல் லிங்க்கை ஓபன் செய்து பார்த்தார்கள்..
மோசடிகள்: அப்போது அந்த முகநூல் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை பதிவிட்டு, மோசடியாக லிங்க்கை அனுப்பி இப்படி தொடர்ந்து பணத்தை சுருட்டி வருவது அம்பலமானது. ஆனால், இந்த கும்பல் யார் என்று தெரியவில்லை.. முதல்வரின் போட்டோவை பயன்படுத்தியிருப்பதுடன், வெறும் 500 ரூபாய் பணத்தை காட்டி, லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டும் அந்த மர்மநபர்களை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications