விவாதத்தை ஏற்படுத்திய "வாரிசு".. அப்பா பிறந்த நாளுக்கு நடிகர் விஜய் வராதது ஏன்?.. எஸ் ஏ சந்திரசேகர்
சென்னை: தனது 81 ஆவது பிறந்தநாளுக்கு விஜய் ஏன் வரவில்லை என்ற காரணத்தை முதல் முறையாக அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் மனம் திறந்துள்ளார்.
நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். திரைத்துறையில் விஜய்யை நல்ல நிலைக்கு கொண்டு வந்த எஸ் ஏ சந்திரசேகர், அவரை அரசியலிலும் வலம் வர வைக்க வேண்டும் என விரும்புகிறார்.
சமூக பிரச்சினைகளை பிரதிபலிக்கும் படங்களை இயக்கிய எஸ் ஏ சந்திரசேகர் நமது மகன் விஜய் சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை தீர்க்க முதல்வர் ஆக வேண்டும் என விரும்புகிறார். இந்த விருப்பம் ரசிகர்களுக்கும் விஜய்க்கும் இருக்கிறது.

எஸ் ஏ சந்திரசேகர்
எனினும் எஸ் ஏ சந்திரசேகர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற ரேஞ்சுக்கு அவசரப்படுவதாக விஜய் கருதுகிறார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவசரப்பட்டு கையை சுட்டுக் கொள்ள கூடாது என்பது விஜய்யின் பாணி. இதை இசைவெளியீட்டு விழாக்களில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரிகளில் தெரிந்து கொள்ளலாம்.

அவசரம் வேண்டாம்
விஜய் இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம் என்ற நிலையில் இருக்கும் போது விஜய்க்கு தெரியாமல் அவரை கலந்தாலோசிக்காமல் அவரது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய விஜய் தந்தை நடவடிக்கைகளை எடுத்தார். இது விஜய்க்கு பிடிக்கவில்லை.

நீதிமன்றம்
இதனால் தந்தைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார். இன்று வரை விஜய் தனது அப்பாவுடன் பேசுவதில்லை என சொல்லப்படுகிறது. தனது தாயுடன் மட்டுமே பேசுவதாகவும் தெரிகிறது. மேலும் பேரக் குழந்தைகளை பார்க்க விஜய் வீட்டுக்கு ஷோபாவும் எஸ்ஏசியும் சென்றால் கூட விஜய் தனது அறையில் இருந்து வெளியே வர மாட்டார் என்றெல்லாம் ஆதாரம் இல்லாத கதைகள் வலம் வருகின்றன.

தீனிப் போடும் விதம்
இந்த நிலையில் இந்த கதைகளுக்கு தீனிப்போடும் விதமாக அண்மையில் எஸ் ஏ சந்திரசேகர் 81 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் போது அந்த கொண்டாட்டத்தில் விஜய் வரவே இல்லை என்ற சம்பவம் அமைந்துவிட்டது. எஸ்ஏசி வெளியிட்ட புகைப்படங்களில் ஷோபா மட்டுமே எஸ்ஏசிக்கு கேக் ஊட்டி இருந்தார். இது சமூகவலைதளங்களில் விவாத பொருளானது.

அறிவுரை
பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விஜய், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்துவிட்டு தனது சொந்த அப்பாவிடமே இப்படி வீராப்பை காட்டினால் எப்படி என்ற ஆதங்கங்கள் குவிந்தன. இந்த நிலையில்தான் தனது பிறந்தநாளுக்கு விஜய் ஏன் வரவில்லை என்பதை தனியார் ஊடகத்தில் எஸ் ஏ சந்திரசேகர் மனம் திறந்து கூறியுள்ளார்.

ஹைதராபாத்
அதாவது விஜய்க்கு ஜூலை 2ஆம் தேதி ஹைதராபாத்தில் ஒரு ஷூட்டிங் இருந்தது. இதற்காக அவர் ஜூலை 1 ஆம் தேதியே புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால்தான் தனது பிறந்தநாளுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். எனினும் இந்த பேட்டியை பார்க்கும் நெட்டிசன்கள், ஹைதராபாத்தில் இருந்தால் என்ன ட்விட்டரில் ஒரு வாழ்த்தை சொல்லியிருக்கலாம், அப்பாவிடம் போன் போட்டு வாழ்த்து சொல்லி பேசியிருக்கலாம், இல்லாவிட்டால் ஷூட்டிங் போக போறதும் தெரியும், தந்தைக்கு பிறந்தநாள் என்பதும் தெரியும். அப்படியிருக்கும் போது முன்கூட்டியே தனது தாய், தந்தையை சந்தித்திருக்கலாம் என மீண்டும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. இன்னும் சிலர் இதெல்லாம் அவர்களுடைய குடும்ப விஷயம், இதில் நாம் மூக்கை நுழைக்கக் கூடாது என்றார்கள். எனவே விஜய்க்கு ஆதரவாகவும் (பர்சனல்), விஜய்க்கு எதிராகவும் ஒரு சேர கருத்துகள் குவிகின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications