சட்டென.. காலையில் வெளியான ஊதிய உயர்வு அறிவிப்பு.. பல ஆயிரம் ஊழியர்களுக்கு.. தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: முக்கியமான சில ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாலையில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சமீபத்தில்தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது புதிய ஊதிய உயர்வு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
சென்னை நகரம் முழுவதும் உள்ள அம்மா உணவகம் கேன்டீன்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜிசிசி) பாத்திரங்கள், சமையல் சாமான்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, அவற்றை புதுப்பிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

மெனு மேம்பாடுகளிலும் கவனம் செலுத்தி, அட்டவணைகள், விளக்குகள் மற்றும் புதிய பாத்திரங்களைச் சரிசெய்வதற்கான மதிப்பீடுகளைத் தயாரிக்குமாறு அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் அம்மா உணவகங்கள் புதிய பொலிவு பெற உள்ளன.
அம்மா உணவக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: இப்படிப்பட்ட நிலையில்தான் அம்மா உணவக தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.25 ஊதிய உயர்வு வழங்கியது சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ரூ.300 ஆக இருந்த தினக்கூலி பணியாளர்களின் ஊதியத்தை ரூ.325 ஆக உயர்த்தி மாநகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
அகவிலைப்படி; சமீபத்தில்தான் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது புதிய ஊதிய உயர்வு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46% இருந்து 50 % உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும்.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2846.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 46% அகவிலைப்படி 01.01.2024 முதல் 50%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு தொகை அந்த மாதமே வரவு வைக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது முறை: ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 9% உயர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9% உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது.இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது. அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன. அதாவது ஒரு புள்ளி ஏறுவது, ஒரு புள்ளி இறங்குவது என்று ஏற்ற இறக்கமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications