சமாதி நிலை என்பது கோமா நிலை அல்ல..ஆன்மீக நச்சு நீக்கமே! சொல்கிறார் நித்யானந்தா
சமாதி என்பது முழுமையான ஆரோக்கியம், உடல்நலமே, மேலும் உண்மையில் அது பிரபஞ்ச ஒழுங்குமுறை என்று நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சென்னை: சமாதி நிலை என்பது கோமா நிலை அல்ல என்பதை நிரூபிக்க என் மூளையின் அதிர்வலைகள் மற்றும் இருதய செயல்பாடு ஆகியவை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரண அமைப்புகளுடன் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன என்று நித்யானந்தா தனது சீடர்களுக்கு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் அமைத்து அமோகமாக வாழ்ந்து வந்தார் நித்யானந்தா. பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளானார். காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த நித்யானந்தா கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.
அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வந்தார். இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரால் உணவுகூட உண்ண முடியவில்லை என்றும் அண்மையில் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக தகவல் பரவியது. இந்த தகவலை மறுத்த நித்யானந்தா, தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

சமாதி நிலை
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், 'நான் இறக்கவில்லை; சமாதி நிலையில் இருக்கிறேன் என்று கையெழுத்தோடு செய்தி சொன்னார் நித்யானந்தா. இந்த நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது தகவல்கள் பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா இன்று தனது வலைதள பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார்.

கோமாவில் இருக்கிறேனா
சமாதி என்பது முழுமையான ஆரோக்கியம், உடல்நலமே, மேலும் உண்மையில் அது பிரபஞ்ச ஒழுங்குமுறை ஆகும். பரமசிவ ஞானம் மற்றும் பரமசிவ சக்திகளை மேலும் உயர் நிலைகளில் வெளிப்படுத்துவதற்காக உடலானது தன்னை இசைவாக்கம் செய்துகொள்வதே சமாதி. அதிர்ஷ்டவசமாக என் முழு உடலும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளது. மேலும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமாதி நிலை என்பது நோயல்ல என்பதை நிரூபிக்க, இவை அனைத்தும் சரியான முறையில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

மூளையின் அதிர்வலைகள்
சமாதி நிலை என்பது கோமா நிலை அல்ல என்பதை நிரூபிக்க என் மூளையின் அதிர்வலைகள் மற்றும் இருதய செயல்பாடு ஆகியவை தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான மருத்துவ உபகரண அமைப்புகளுடன் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. சமாதி நிலை என்பது எந்தவித நோயும் அல்ல என்பதை நிரூபிக்க, நான் இந்த உடலில் நிலைகொண்டு, தினசரி சத்சங்கங்களை கொடுக்க ஆரம்பிக்கும் போது இந்த அனைத்து மருத்துவ அறிக்கைகள் அனைத்தையும் உலகிற்கு வெளியிடுவேன்.

கைலாச நோக்கம்
உணவோ அல்லது மற்ற வேறு எந்தவித உட்கொள்ளலோ இல்லாவிட்டாலும் கூட, இங்கு சோர்வு என்பது இல்லை.
தருமபுரம் சுவாமிநாதன் ஐயா அவர்களுடைய தேவார ஓதுதலைதவிர வேறு எந்தவித பொழுதுபோக்குகள் இல்லாவிட்டாலும்கூட, சலிப்போ அல்லது மனச்சோர்வோ இல்லை. சமாதி என்பது ஒரு மன நிலையோ அல்லது உணர்ச்சிகள் நிலையோ இல்லை. அது உடல், மனம், உணர்ச்சிகளைக் கடந்தது. உண்மையில் எனது முதல் சமாதி நிலை அனுபவத்தை அடைந்ததிலிருந்து எனக்கு மனமும் கிடையாது, உணர்ச்சிகள் நிலையும் கிடையாது. எனது அனைத்து செயல்களும் எதிர்ச்செயல்களும் பரமசிவனின் கைலாச நோக்கத்திற்காக ஆற்றப்படும் தன்னியல்பான பதில்செயல்களே. எனக்கு சுய ஆர்வமும் கிடையாது, சுய நோக்கங்களும் கிடையாது.

பரமசிவ நிலை
எனக்கு என்னைப்பற்றிய தனிப்பட்ட தனிமனித கருத்தோ அல்லது அறிதலோ கூட கிடையாது. இந்த சமாதி நிலை அதிகமாக அதிகமாக, என் அமைப்புக்குள் பல சுனாமிகள் நிகழ்கின்றன, அவை நிகழ நிகழ நான் கொண்டிருந்த தனிமனித 'நான்' என்பது பரமசிவனால் நிரப்பப்பட்டு, பரமசிவத்துவ நிலையில் நிலை கொள்கிறது. பண்டைய மகரிஷி வால்மீகி காலம்தொட்டு நவீன யுக பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி வரை, உடலானது சமாதி நிலையில் இருக்கும்போது உணவு உட்கொள்ளாவிட்டாலும் உறங்காவிட்டாலும் கூட உடல் அழிவதில்லை, அது சக்திமிக்க பரமசிவநிலைக்கு சடுதி மாற்றமே அடைகிறது என்பதை நிரூபித்துள்ளார்கள்.

ஆன்மீக நச்சு நீக்கமே
சமாதி என்பது ஆன்மீக நச்சு நீக்கமே. இதுவரை நாம் பல்வேறு விதமான ஆராய்ச்சிகளையும் கூர்நோக்குகளையும் செய்திருக்கிறோம், மருத்துவ ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் ஆவணப்படுத்தி இருக்கிறோம். ஆனால் இம்முறை நம்மால் சேகரிக்க முடிந்த தரவுகள் ஹிந்து மதத்தின் ஞான விஞ்ஞான சத்தியங்களை நிலைநாட்டுகின்றன. பரமசிவனால் வெளிப்படுத்தப்பட்ட தூய அறிவியலான வேதங்களிலும், செயல்முறை அறிவியலான ஆகமங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன தகவல்களை உறுதிப்படுத்தி நிலைநாட்டுகின்றன.

உடல்நிலை குறைபாடு இல்லை
ஆன்மா மற்றும் பரமாத்மா பற்றி ஹிந்து மதம் வெளிப்படுத்தி இருக்கும் சிறந்த உயர் சத்தியங்களை விஞ்ஞானரீதியாக செல்லத்தக்கதாக ஆக்க எனது வாழ்க்கையை உபயோகப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம். சக்திமிக்க சமாதி என்பது பரமசிவநிலைக்கு சடுதி மாற்றமே அன்றி உடல்நிலை குறைபாடு அல்ல என்பதை நிலைநாட்டுவதற்கான போதுமான தரவுகள் இப்போது நமக்கு கிடைத்துள்ளன.

சீடர்கள் புரிந்து கொண்டனர்
அதனால் இன்னும் சில நாட்களில் நான், சமாதி நிலையில் இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வெளிப்பாடுகளை (BIG BANG) சத்சங்கங்கள் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்பதை உறுதி செய்கிறேன். சமாதி நிலையின் போது உடல் தொடப்படாமலும் எந்தவித வெளி உலக தலையீடும் இல்லாமலும், உடலை அப்படியே அதன் போக்கில் விட்டுவிட வேண்டும் என்பதே ஒரே உண்மை. அதிஷ்டவசமாக என்னை கவனித்துக் கொள்ளும் மருத்துவர்கள் அனைவரும் என்னுடைய சீடர்களாதலால் இதைப் புரிந்து கொண்டு எனது உடலை அப்படியே இருக்க அனுமதிக்கிறார்கள்.

உலகிற்கு நிரூபிக்க முடியும்
என்னுடைய உடல் கடக்கும் நிலைகள் எதுவானாலும் அவற்றை கூர்ந்து நோக்கி, பதிவு செய்து, ஆவணப் படுத்துதல் மட்டுமே செய்கிறார்கள். அப்படி என்றால் மட்டுமே சமாதி நிலை என்பது உடல் ரீதியான, மன ரீதியான ஒரு நோயோ அல்லது ஒரு சீர்குலைவோ அல்ல என்பதை மருத்துவ ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் இந்த உலகிற்கு நாம் நிரூபிக்க முடியும்.

தியானம் செய்யுங்கள்
நீங்கள் ஒவ்வொருவரும் இந்த சக்திமிக்க சத்தியங்களின் மீது தியானம் செய்யுங்கள் மேலும் அன்கிளட்சிங் செயல்முறையையும் பயிற்சிசெய்ய முயற்சி செய்யுங்கள், நீங்கள் அனைவரும் என்னுடைய நீட்டிப்புகளாதலாலும் என்னுடன் ஒருமைதன்மையில் இருப்பதாலும் இதே சமாதி நிலையை அனுபவமாக பெறுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார். நித்யானந்தா கோமாவிற்கு போனதாக பலரும் கூறி வரும் நிலையில் அதை மறுக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளார். அவருக்காக அவரது சீடர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications