இன்றே கடைசி நாள்.. முடியும் கால அவகாசம்! சம்பா பயிர் காப்பீட்டுக்கு விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு
சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சம்பா பயிர் காப்பீடு செய்வதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு நீட்டிப்பு செய்த நிலையில் அதற்கான காலஅவகாசம் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் சம்பா பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு இன்று நல்ல சான்ஸ் உள்ளது.
இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. இதனால் தான் விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

விவசாயிகளுக்கு மானியம், கடன் வழங்குவது, பேரிடர் காலத்தில் இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக பயிர் காப்பீடு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதாவது தான் பருவமழை மற்றும் அதிகமான வெயில் உள்ளிட்ட காலநிலை மாற்றங்களால் நஷ்டத்தை சந்திக்கும்போது விவசாயிகள் தங்களின் பயிர்களை காப்பீடு செய்தால் அதில் இருந்து குறிப்பிட்ட அளவுக்கு பணம் இழப்பீடாக வழங்கப்படும்.
மத்திய அரசு சார்பில் மத்திய வேளாண் துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு பயிர் காப்பீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா, தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு நவம்பர் 15ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானவர்கள் பயிர் காப்பீடு செய்தனர்.
ஆனாலும் கூட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாமல் இருப்பது, தீபாவளி பண்டிகை காலம், இணைய சேவை மையங்களில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையை எதிர்கொண்டனர். இதனால் பயிர் காப்பீட்டுக்கான காலஅவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக தமிழக வேளாண் ஆணையம் எல்.சுப்பிரமணியன் சார்பில் மத்திய வேளாண் துறைக்கு கடிதிருந்தார். அதில் நவம்பர் 30 வரை பயிர் காப்பீடு தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் மத்திய அரசு நவம்பர் 22ம் தேதி வரை பயிர் காப்பீட்டுக்கான தேதியை நீட்டிப்பு செய்து இருந்தார்.
இந்த நீட்டிக்கப்பட்ட தேதி என்பது இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் விவசாயிகள் சம்பா பயிர் காப்பீட்டை இன்றுக்குள் மேற்கொள்ள வேண்டும். இ சேவை மையங்கள் இந்த பயிர் காப்பீடு என்பது செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications