Lottery: 10 ஆண்டுகளாக ஒரே நம்பர்.. 11 கோடியை தட்டி தூக்கிய பெண்! லாட்டரியில் நடந்த பேரதிசயம்
சென்னை: 2 லாட்டரியில் ஒருமுறை பரிசு அடிக்காவிட்டாலே இந்த நம்பர் நமக்கு ராசி இல்லை என்று கருதி வேறு வேறு எண்களை வாங்குவதை கேள்விபட்டு இருப்போம். ஆனால், 69 வயதான பெண் ஒருவர் 10 ஆண்டுகளாக ஒரே எண்ணில் லாட்டரி விளையாடி 11.4 கோடி ரூபாய் பரிசை அள்ளியுள்ளார். ஒரே நாளில் வாழ்க்கையே புரட்டி போட்ட சம்பவம் பற்றி அந்த அதிர்ஷ்டக்கார பெண்மணி கூறிய தகவலை இங்கே பார்க்கலாம்.
லாட்டரியில் யாருக்கு எப்போது பணம் அடிக்கும் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக லாட்டரி வாங்கி பத்து பைசா கூட அடிக்காமல் இருந்த நபர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். சிலருக்கு வாங்கிய முதல் டிக்கெட்டிலேயே அடிக்கும் நிகழ்வுகளும் உள்ளது. இதைத்தான் அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்கிறார்கள் போல என முணுமுணுத்துக்கொண்டே லாட்டரி பிரியர்கள் இந்த நிகழ்வுகளை எல்லாம் சற்றே பொறாமையுடன் கடந்து செல்வதை பார்க்க முடியும்.

10 வருஷமாக ஒரே எண்ணை வாங்கி உள்ளார்
லாட்டரியில் பணம் வெல்ல வேண்டும் என்று ஒவ்வொருவரும் ஒரு ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள். சிலர் பிறந்த தேதி, தங்களுக்கு அதிர்ஷ்டமான எண்கள் என பார்த்து பார்த்து வாங்குவதை பார்க்க முடியும். ஆனால், அதிர்ஷ்டம் அடிப்பது என்னமோ கடவுளுக்குதான் வெளிச்சம். சரி அதெல்லாம் இருக்கட்டும் இங்கே விஷயத்திற்கு வருவோம்.
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தை சேர்ந்த 69 வயதான பெண் ஒருவருக்கு லாட்டரியில் 1.2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரு.11.4 கோடி) பரிசாக அடித்துள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி விளையாடும் இவர் ஒரே மாதிரியான எண்ணை வாங்கி வருகிறாம். 02, 16, 18, 19, 26 என்ற அதிர்ஷ்ட எண்ணை சரியாக இணைத்து இந்த பரிசை அடித்துள்ளார்.
வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்போம்
10 வருடங்களாக பரிசு விழாவிட்டாலும் இந்த நம்பர் தனக்கு என்றாவது ஒருநாள் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் லாட்டரி விளையாடிய அந்த பெண்ணுக்கு கடைசியில் நம்பிக்கை வீண் போகவில்லை என சொல்லும் அளவிற்கு 11.4 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனால், மகிழ்ச்சியில் திளைத்து வரும் அந்த பெண் கூறியதாவது:-
ஒரே மாதிரியான செட் நம்பர்களை வைத்து பல ஆண்டுகளாக நான் லாட்டரி விளையாடி வருகிறேன். எனவே ஒவ்வொரு குலுக்கல் முடிந்த பிறகும் பரிசு அடித்துள்ளதா? என்று சோதிப்பேன்.. இந்த முறை பரிசு அடித்ததும் உடனடியாக தெரிந்து கொண்டேன். பணம் அடித்த மகிழ்ச்சியில் எனது கணவரை உடனடியாக எழுப்பினேன். எனது கணவர் இனி பணியில் இருந்து ஓய்வு பெறலாம். நாங்கள் இனி ரிலாக்ஸ் ஆக வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்போம்" என்றார்.
இந்தியருக்கு அடித்த பரிசு
அமெரிக்கா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் லாட்டரிகளுக்கு அனுமதி உள்ளது. இந்தியாவிலும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரிக்கு அனுமதி இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களிலும் லாட்டரிக்கு அனுமதி உள்ள நிலையில், அங்கு பணியாற்றும் இந்தியர்கள் சிலருக்கும் பரிசு அடிப்பதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட பிக் டிக்கெட் லாட்டரியில் 15 மில்லியன் திர்ஹாம் ஷார்ஜாவில் பணியாற்றி வரும் இந்திய டிரைவரான விபீஷ் பள்ளியாலி என்பவருக்கு அடித்தது.
பல்லியாளி கடந்த 15 ஆண்டுகளாக ஷார்ஜாவில் பணியாற்றி வந்த நிலையில், வாழ்நாளில் மிகப்பெரிய திருப்பம் வந்துவிட்டதாக லாட்டரியில் பரிசு வென்றதும் கூறினார். இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி அவருக்கு கிடைக்கும். தனது நண்பர்கள் மூன்று பேருடன் பரிசை பகிர்ந்து கொள்ள இருப்பதாக பள்ளியாலி கூறினார்.












Click it and Unblock the Notifications