'சண்டாளர்' சொல்லை பயன்படுத்த கூடாது.. வழக்கு பதிவு செய்ய பட்டியலினத்தோர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை
சென்னை: சண்டாளர் என்ற வார்த்தையை நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ பயன்படுத்தக் கூடாது.. மீறி பயன்படுத்தினால் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது.
சண்டாளர் என்கிற சாதி பெயரை பயன்படுத்த கூடாது என பட்டியலினத்தோற் மாநில ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது. சண்டாளர் என்ற சாதி பெயரை பயன்படுத்தினால் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பட்டியலினத்தோர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும் அவமதிப்பையும் சுட்டுவதாக இருக்கின்றன. தங்களுடைய சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதுகின்ற சாதிகள் அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.
மனிதர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், பிணங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளைச் செய்கின்ற சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாடுவதற்குப் பயன்படுத்துவதும், கலை இலக்கியங்களிலும், திரைப்பட நகைச் சுவைக் காட்சிகளிலும், திரைப்படப் பாடல்களிலும் அப்பெயர்களைப் பயன்படுத்துவதும் பரவலாக இருக்கின்றன.
இது அப்பெயர்களிலுள்ள மக்களையும் அவர்களைப் போன்ற மக்களையும் புண்படுத்தும் செயலாகும். தவிர இது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றச்செயல் என்ற எண்ணமும் பொதுச் சமூகத்தில் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் விமர்சித்து பேசியிருந்தார். அப்போது குறிப்பிட்ட அந்த வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தார். இது தொடர்பாக சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தென்காசியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்தனர்.
பின்னர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். சண்டாளர் என்ற சொல்லை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும் அதிமுக பிரசார பாடலில் இருப்பதாகவும் கந்த சஷ்டி கவசத்திலும் வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் சீமான் பேட்டி ஒன்றில் கூறினார். தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பிட்ட அந்த வார்த்தை விவாதத்திற்கு வித்திட்ட நிலையில், தமிழக அரசுக்கு மேற்கண்ட பரிந்துரையை ஆணையம் அளித்துள்ளது.
-
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக












Click it and Unblock the Notifications