சங்கீதாவுடன் வர சொல்லுங்க.. 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது! விஜயை யாருமே சீண்டலயே! போட்டு தாக்கிய பிரபலம்
சென்னை: உதயநிதி ரோடு ஷோ நடத்தியது விஜய்க்காக இல்லை.. விஜய்க்கு அப்படியென்ன ஸ்கோப் வந்துவிட்டது? கோவை ஸ்தம்பித்துவிட்டதா என்ன? விஜய்யை யாருமே சீண்டவில்லை.. உதயநிதிக்கு குறைவான கூட்டமும், விஜய்க்கு அதிகமான கூட்டமும் கூடினாலும், அதனால் என்ன பலன்? தேர்தல் முடிவுகள்தான் அதை தீர்மானிக்கும் என்று திருச்சி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் இருவரின் கோவை வருகையும், அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.. விஜய் ரோடு ஷோ நடத்தியதை போலவே, உதயநிதியும் ரோடு ஷோவில் ஈடுபட்டார்.

இதன்காரணமாக அவிநாசி சாலையில் 2 கட்சிகளின் கொடிகளுமே ஆக்கிரமித்து கொண்டிருந்தன.. இதன்காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில், திமுகவின் கட்சிக் கொடியை சேதப்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Oneindia Arasiyal யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள திருச்சி சூர்யா, "பூத் கமிட்டி போடுவது என்பது அனைத்து கட்சியிலும் கட்டமைப்பு போடுவதற்கான இயல்பான விஷயம்.. ஆனால், விஜய் கட்சியில் கட்டமைப்பு இருக்கிறதா? என்பது கேள்விக்குறியே..
தவெக தலைவர் விஜய்
ஏனென்றால், மேடையில் அலங்கரிக்கக்கூடிய ஆறேழு பேர் மட்டுமே இருக்கிறார்கள். மாநில நிர்வாகிகள் என்று யாருமில்லை, மாநில நிர்வாகிகளுக்கான பட்டியலையும் இன்னும் முடிக்கவில்லை. அதேபோல மாவட்ட செயலாளர்களையும் இன்னும் முழுமையாக போடல. இதற்கு நடுவில் காசு வாங்குகிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள் , சாதி பார்த்து பதவி போடுகிறார்கள் என்றெல்லாம் புகார்கள் வருகின்றன.
இதுபோன்ற பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய மாவட்ட செயலாளர்களையே இன்னும் நியமனம் செய்ய முடியாமல் இருக்கும் விஜய், 69,000 பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பதற்கு பலம் உள்ளதாக கூறுவது வேடிக்கையான விஷயம்.

பூத் கமிட்டி வலுவாக உள்ள கட்சிகள்
தமிழகத்தை பொறுத்தவரை பூத் கமிட்டி அளவில் மிகவும் வலுவாக இருப்பது, திமுக, அதிமுக, விசிக மட்டும்தான்.. வேறு கட்சிகளிடமும் கிடையாது.. தன்னை வேடிக்கை பார்க்க வரும் ரசிகர்கள் செய்யும் ஆரவாரத்தை வைத்தே, பூத் கமிட்டி போட்டுட்டாரு, கட்சியை நிப்பாட்டிட்டாரு, வேட்பாளர்கள் தயார், மக்களின் ஆதரவும் தயார், விஜய் ஆட்சி அமைக்க போகிறார் என்ற பிம்பத்தை ஊடகங்கள் வேண்டுமானால் கட்டமைக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் எல்லாமே தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.
விஜய் மாநாட்டில் பேசும்போது படத்தில் வசனம் பேசுவது போல இருந்தாலும், அதில் ஒரு வேகம், பயங்கர திருப்பங்கள், நிறைந்திருந்தது. ஓராண்டு நிறைவு நிகழ்ச்சியின்போது, மாநாட்டின் 50 சதவீத வீர்யத்தைதான் காண முடிந்தது.. இப்போது பூத் கமிட்டி கூட்டத்தில், 4 நிமிஷம் மட்டுமே பேசியிருக்கிறார்... விஜய் வாயில் தமிழும் வரல, உச்சரிப்பும் இல்லை, கொள்கையும் பேசத்தெரியல, வரலாறும் பேசத்தெரியல..
தமிழ் வரல.. பேச வரல
1977 என்ற வருஷத்தை சொல்லவும் வாய் வரல.. மேடையில் பேச எழுதி தந்த ஸ்கிரிப்ட்டை,, கோயம்புத்தூர் போகும்போது விஜய் சென்னையிலிலேயே விட்டுட்டு போயிட்டாரு போல. இப்போதுவரை திரைக்கதை வசனமாகவே அவரது மேடை உள்ளது..
கமலுக்கும் கூட்டம் கூடியது.. குஷ்புவுக்கும் கூட்டம் கூடியது.. வடிவேலுவுக்கும் கூட்டம் கூடியது. இவர்கள் எல்லாம் அரசியலில் என்ன சாதித்தார்கள்? மக்களுக்காக ஆட்சி செய்ய வந்துவிட்டால், மக்களுடன் மக்களாக பழக கற்றுக் கொள்ள வேண்டும். எம்ஜிஆருக்கு பெரிய பிளஸ் பாயிண்டே, கிராமந்தோறும் மக்களிடம் இறங்கி, குடிசைக்குள்ளும் சென்று வந்ததுதான்.
கோவை போறதுக்கு 50 லட்சமா
அதுபோல் விஜய் இறங்கி வரணும்.. எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்? மக்களாட்சி தரும் தலைவருக்கு கோவை போறதுக்கு 50 லட்சமா? இன்று வேடிக்கை பார்க்க வரும் கூட்டம் முழுவதும் வாக்காக மாறுமா? என்பதுதான் கேள்வி.
உதயநிதி ரோடு ஷோ நடத்தியது விஜய்க்காக இல்லை.. செந்தில் பாலாஜி தான் கோவையின் பொறுப்பு அமைச்சர்.. எனினும், எஸ்பி வேலுமணி , எடப்பாடி பழனிசாமி இருவருமே கோவையை தங்களது கோட்டையாக வைத்துக் கொண்டு, திமுகவுக்கு இங்கு செல்வாக்கில்லை என்றார்கள்.. இப்படி சொன்னபிறகும் செந்தில் பாலாஜி சிறையிலிருந்துகொண்டே, அண்ணாமலையை தோற்கக்ககூடிய அளவுக்கு வேட்பாளரை நியமித்து, மாவட்டத்தையே தன்னுடைய கையில் வைத்திருந்தார்..
விஜய் - உதயநிதி - மோதட்டுமே
ஆனால், செந்தில் பாலாஜி பதவி விலகியதுமே, திமுகவுக்கு கோவையில் செல்வாக்கு போய்விட்டது என்று யாரும் சொல்லிவிடக்கூடாது.. எனவே, செந்தில்பாலாஜியே இல்லையென்றாலும்கூட, கோவையில் திமுகவுக்கு ஆதரவு உள்ளது என்பதை வெளிப்படுத்தவே ரோடு ஷோ நடத்தப்பட்டது. இதில் விஜய்க்கு பயந்து உதயநிதி ரோடு ஷோ நடத்தவில்லை. அப்படியே உதயநிதியுடன் விஜய் மோதித்தான் பார்க்கட்டுமே.
ஆனால், விஜய்க்கும், உதயநிதிக்கும் கூடிய கூட்டங்கள் ஒன்றா? என்றால் நிச்சயம் கிடையாது.. கூடிய கூட்டங்களை வைத்தும் முடிவுகளை செய்ய முடியாது. பாஜகவில் சரத்குமார் இணைந்தபோதும் கூட்டம் கூடியது..
விஜய் கூட்டணி யாருடன்?
திமுகவா அதிமுகவா? தவெகவா? நாதகவா? என்றுதான் அரசியல் களத்தில் போட்டிகள் இருக்கும்.. அதேசமயம் விஜய்க்கு கூட்டமும், ஆரவாரமும் அதிகமாக இருக்கத்தான் செய்யும்.. ஏனென்றால், இதுவரை விஜய்யை மக்கள் யாருமே பார்த்ததில்லை.. அதனால் கூட்டம் வருவார்கள்...
கூட்டணியை பொறுத்தவரை, விஜய்யுடன் பாமக கூட்டணி வைக்காது. அந்த அளவுக்கு பாமக தரம் தாழ்ந்து போகுமா? என தெரியவில்லை.. ஆரம்பத்திலிருந்தே விஜய்யை ஆரம்பித்து வந்த சீமான், அவருடன் கோர்க்க முடியாது என்று தெரிந்ததுமே, எதிராக பேச துவங்கிவிட்டார்.. எனவே, எந்த சூழலிலும் சுமூக உறவு அரசியலில் நாதக - தவெக இடையே ஏற்பட வாய்ப்பில்லை. தவெகாவை பொறுத்தவரை, இன்றுள்ள சூழலில் தேமுதிக மட்டுமே சுமூகமாக உள்ளது. மற்ற கட்சிகள், மற்றும் சிறுபான்மையினர் அனைவருமே விஜய்யிடம் வருவதற்கு தயங்குகிறார்கள்.
6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது
விஜய்யால் மாலை 6 மணிக்கு மேல வெளியே வர முடியாது.. 6 மணிக்கு மேல ஆட்டோ ஓடாது.. அதுக்கான ரகசியம் என்ன? கோவை பூத் கமிட்டி விழாவும் 6 மணிக்கு முன்பேயே முடிந்துவிட்டது.. எங்கேயுமே அவரால் மாலை 6 மணிக்கு மேல் இருக்க முடியாது. எனவே, இரவு நேரத்திலும் மக்கள் கட்சி கூட்டத்திலும் பங்கேற்க விஜய் வெளியே வரவேண்டும்.. ஆனால், அவர் மாட்டார்.. இதை நான் சவால் விட்டு சொல்கிறேன்.
அதேபோல, தன்னுடைய மனைவியுடன் கைகோர்த்து வெளியே வர சொல்லுங்க... கட்சி நிகழ்வுக்குகூட வேணாம், பொது நிகழ்ச்சிகளுககு வர சொல்லுங்க.. மோடியை மட்டும் எல்லாரும் கேள்வி கேட்கறீங்க? விஜய்யை கட்டின மனைவியுடன் வெளியே வர சொல்லுங்க" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு -
41 பேரை பலி கொண்ட கரூர் நெரிசல்..ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வந்த மதியழகனுக்கு சீட் கொடுத்த தவெக விஜய் -
அத்தனை வலிகளையும் தாங்கி கொண்டிருக்கிறேன்.. தவெக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் விஜய் உருக்கம் -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
மார்ச் 30ல் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்! முதல்வரின் கொளத்தூர் தொகுதி உட்பட.. 3 தொகுதிகளுக்கு அனுமதி -
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
விஜய் எனக்காக செய்ததை மறக்க முடியாது! அதுவும் அந்த நேரத்தில்.. உருக்கமாக பேசிய சத்யராஜ் -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
விஜயை வீழ்த்தினால் அமைச்சர் பதவி கன்பார்ம்.. ஜெயிண்ட் கில்லர் "இனிகோ".. ஸ்டாலின் திருச்சி சர்ப்ரைஸ் -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications