சனி பெயர்ச்சி பலன் 2023: இந்த 6 ராசிக்காரர்களின் வேலை, தொழிலில் திடீர் மாற்றம் வருமாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திடீர் வேலை இழப்பு என்பது பலருக்கும் அதிர்ச்சியை தரக்கூடியது. இன்றைய காலகட்டத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலையில் இருந்தவர்கள் கூட வேலையை இழக்க நேரிடுகிறது. சனி பெயர்ச்சி காலத்தில் எத்தனையோ பேர் வேலைக்காக சனிபகவானை சரணடைகின்றனர். சனி பகவான் ஆயுள்காரகன்.. கர்மகாரகன். சனிபகவானின் அருள் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். மரணத்திற்கு சமமான கண்டங்கள் இருந்தாலும் அது நீங்கும். எனவேதான் சனி பெயர்ச்சியை பலரும் எதிர்பார்க்கின்றனர். இந்த சனி பெயர்ச்சியால் யாருடைய வேலையில் மாற்றம் ஏற்படும் என்று பார்க்கலாம்.

சனி பெயர்ச்சி காலங்களில் பலரும் சனிபகவான் பரிகார தலங்களில் வழிபடுகின்றனர். சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் எப்படி இருக்கிறார் என்பதை பொருத்து உங்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படும். சனி பெயர்ச்சியால் சின்னச் சின்ன பிரச்சினைகள் இருந்தாலும் குரு பகவான் பார்வை பலத்தால் பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும். சனி பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

Sani Peyarchi Palan 2023: These 6 zodiac signs will have a sudden change in their work and career

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்களுக்கு சனி பெயர்ச்சி நல்லதொரு விடிவு காலத்தை தரப்போகிறது. கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதற்கான பலன் கிடைக்காமல் கஷ்டப்பட்ட உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. லாப சனி தொழில் வியாபாரத்தில் நிறைய லாபத்தை தரப்போகிறது. வேலையில் புரமோசனை தரப்போகிறது. வெளிநாடு வேலை, கல்வி வாய்ப்பினை தரப்போகிறது. அனுபவங்களை பாடங்களாக வைத்து முன்னேற்றம் காண்பீர்கள். நோய் பிரச்சினைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வைத்தீஸ்வரன் கோவில் சென்று கோவில் குளத்தில் வெல்லத்தை கரைத்து விட்டு வர இத்தனை ஆண்டு காலம் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

Sani Peyarchi Palan 2023: These 6 zodiac signs will have a sudden change in their work and career

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் வியாபார ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்யும் காலத்தில் உங்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் வாங்குவீர்கள். பெண்களுக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும் அதிகரிக்கும். திருச்சியில் அருள்பாலிக்கும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரியை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

Sani Peyarchi Palan 2023: These 6 zodiac signs will have a sudden change in their work and career

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே..உழைப்பு உயர்வை தரப்போகிறது. வேலையில் இடமாற்றம் கிடைக்கும்.. வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் பிரச்சினையை சந்தித்து வந்தவர்களுக்கு இனி எல்லாம் ஜெயமாகப்போகிறது. உயரதிகாரிகளின் ஆதரவுடன் நல்ல புரமோசன் கிடைக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். இந்த ஆண்டு நீங்கள் பழனிமலை முருகனை படியேறி சென்று வணங்கி வர சிறப்பான ஆண்டாக அமையப்போகிறது.

கடகம்

Sani Peyarchi Palan 2023: These 6 zodiac signs will have a sudden change in their work and career

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு சனி பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்று பார்த்தால் அஷ்டமத்து சனி காலம் என்றால் கஷ்டங்கள் வருமே கவலை பட வேண்டாம் குருபகவானின் பார்வை உங்களுடைய ராசி மீது விழுவதால் கவலைகள் நீங்கும். குரு பார்வையால் அற்புதமான பலன் கிடைக்கும் என்றாலும் அவ்வப்போது சனி தனது வேலையை காட்டுவார். பயணங்களில் கவனம் தேவை. வேகத்தை குறைத்து விவேகத்துடன் செயல்படுவது நல்லது. இந்த ஆண்டு நீங்கள் சுசீந்தரம் தாணுமாலயசுவாமியில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்

Sani Peyarchi Palan 2023: These 6 zodiac signs will have a sudden change in their work and career

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்கிறார். நேரடியாக சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். கூடவே கணவன் மனைவி இடையேயான பேச்சுவார்த்தையில் நிதானமும் கவனமும் தேவை. சில மாதங்களில் குரு பகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. நிறைய பண வரவு வரும். கண்டச்சனியால் ஏற்பட்ட கவலைகள் நீங்கப்போகிறது. சூரியனார் கோவிலுக்கு சென்று ஞாயிறுக்கிழமை சூரியனை வணங்கி வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். கோதுமையால் செய்த உணவுப்பொருட்களை தானம் அளிப்பது சிறப்பானது.

கன்னி

Sani Peyarchi Palan 2023: These 6 zodiac signs will have a sudden change in their work and career

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களுக்கு சனி பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போன இத்தனை ஆண்டுகாலம் கஷ்டங்களை பொருத்துக்கொண்டு இருந்தீர்கள். உங்களுக்கு இனி எல்லாம் சுகமே என்பது போல சனி பகவான் நல்லதை தரப்போகிறார். இனி தொட்டதெல்லாம் பொன்னாகும். கடன்களை அடைபடுவதற்கான நேரம் வந்து விட்டது. உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட நீங்கள் புதன்கிழமை பச்சைநிற ஆடையை தானமாக கொடுங்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவெண்காடு புதன் ஸ்தலங்களில் சென்று இறைவனை வழிபட நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+