ஊரெல்லாம் உல்லாசம்... சிக்கியவுடன் போலீஸிடம் நீலி கண்ணீர் வடித்த சல்லாப சஞ்சீவி
Recommended Video

சென்னை: சம்பாதித்த பணத்தில் ஜாலியாக பெண்களுடன் ஊர் சுற்றிவிட்டு தற்போது சிக்கியவுடன் போலீஸாரிடம் நீலிக் கண்ணீர் வடித்துள்ளார் ஆதம்பாக்கத்தில் விடுதி நடத்திய சஞ்சீவி.
சென்னை ஆதம்பாக்கம் தில்லை நகரில் பெண்களுக்கான விடுதியை நடத்தி வந்தார் சஞ்சீவி. இவர் திருச்சியை சேர்ந்தவர். விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இவர் பெண்கள் மீதான சல்லாபத்தின் காரணமாகவே விடுதியை தொடங்கியதாக போலீஸ் விசாரணையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். பெண்கள் விடுதியை தொடங்குவதற்கு முன்னர் நன்றாக சம்பாதித்த பணத்தை பெண்களுடன் ஜாலியாக இருப்பதற்காவே செலவு செய்துள்ளார்.

முடியவில்லை
இதுகுறித்து சஞ்சீவி போலீஸிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில் பெண்களுடன் ஜாலியாக ஊர் சுற்றியதால் கடன் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது. எனினும் என்னால் பெண்களுடன் ஜாலியாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை.

புகைப்படங்கள்
இதனால் நண்பர்களிடம் ஆலோசனை கேட்டதில் அவர்கள்தான் பெண்கள் விடுதியை நடத்தும் ஐடியாவை கொடுத்தனர். அவ்வாறு கொடுத்ததன் பேரில் பெண்கள் விடுதியை தொடங்கினேன். அவர்கள் அறையில் ரகசிய கேமரா வைத்துவிட்டு அதில் பதிவாகும் அவர்களது அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி அவர்களை என் வழிக்கு கொண்டு வரலாம் என நினைத்தேன்.

சிக்கி கொண்டேன்
மேலும் நான் கூப்பிடும் போதெல்லாம் அவர்கள் வருவர். அந்த விடுதியையும் விட்டு காலி செய்யாமல் இருப்பார்கள் என்பதால் எனக்கு வாடகைக்கு மாதந்தோறும் வரும் என நினைத்தேன். அதன்படியே ரகசிய கேமராக்களை வைத்தேன். ஆனால் தற்போது சிக்கிக் கொண்டேன்.

நீலிக்கண்ணீர்
என்னால் பெண்களுடன் சல்லாபமாக இல்லாமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் இந்த விடுதியை தொடங்கி என் ஆசையை தீர்த்து கொள்ளலாம் என நினைத்தேன். மற்றபடி நான் எந்த தவறையும் செய்யவில்லை என சஞ்சீவி நீலி கண்ணீர் வடித்தார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications