Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாந்தனுக்கு திடீர் உடல்நலக் குறைவு! திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி! பதைபதைக்கும் வேல்முருகன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில், தமிழீழத்தை சேர்ந்த சகோதரர் சாந்தனும் ஒருவர். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், இவர் திருச்சி ஒன்றிய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இவர் தமிழீழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அவருடைய சொந்த நாட்டில் இருந்து ஒப்புதல் அளித்த பின் அவர்களை அனுப்புவதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த முன் முயற்சியும் தமிழ்நாடு அரசோ, ஒன்றிய அரசோ எடுக்காதது கவலை அளிக்கிறது.

Santhan sudden health decline, Admitted to Trichy Government Hospital

கடந்த சில மாதங்களாக திருச்சி முகாமில் இருக்கும் சாந்தன். தன்னை சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு இந்திய - இலங்கை - தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவரோடு கூட வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன் என அதில் கூறி உள்ளார். மேலும் தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள மனு, நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், சாந்தனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. உச்சநீதிமன்றத்தால் கடந்த 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டும், முருகன், சாந்தன், ராபா்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய தமிழா்களை, திருச்சி சிறப்பு முகாமில் வைத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது; மனிதநேய மாண்பிற்கு எதிரானது.

முருகன், சாந்தன் உள்ளிட்டோர் விடுதலைக்கு பின்னர், அவர்கள் விரும்பும் நாட்டிற்கோ அல்லது அவர்களின் உறவினர்களிடமோ சேர்ந்து வாழ வேண்டும் என்பதே, ஜனநாயக உணர்வாளர்கள், நீதிமன்றத்தில் வாதடிய வழக்கறிஞர்கள் முழக்கம். ஆனால், அதற்கெல்லாம் அரசுகளிடம் எந்த திட்டமும் இல்லாதது கண்டனத்துக்குரியது.

எனவே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சாந்தனுக்கு, உயர் மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் , சாந்தன் ஆகியோரை விடுவித்து, அவர்கள் விரும்பும் நாட்டிற்கு செல்ல தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் அனுமதிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+