பல கோடிப்பே..போயஸ் கார்டனில் சந்தானத்தின் வசந்த மாளிகை! ஆர்யா இடித்த வீட்டை மாஸா கட்டிட்டாரே! ஹேப்பி
சென்னை: சென்னை ஈசிஆர்-ல் பிரமாண்டமாக புதிய வீடு கட்டி குடியேறி இருக்கிறார் நடிகர் சந்தானம். பழைய வீட்டை வாங்கி வேலை பார்க்க இருந்த நிலையில், நடிகர் ஆர்யா அந்த வீட்டை இடித்து விட்டதாக கலகலப்பாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்தை நடத்தி முடித்திருக்கிறார் சந்தானம். இதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் சந்தானம். குறிப்பாக விஜய் டிவியில் இருந்து வந்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர். சிம்பு நடித்த மன்மதன் படத்தில் அறிமுகமாகி அதற்குப் பிறகு நாயகர்களுக்கு இணையான கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர்.
காமெடியனாக ஏராளமான படங்களை நடித்துக் குவித்த அவர் தொடர்ந்து நாயகனாக அவதாரம் எடுத்த தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார்.

தில்லுக்கு துட்டு படம் கொடுத்த வெற்றி அவருக்கு உற்சாகத்தை தந்தது. அதை அடுத்து டிடி ரிட்டன்ஸ் படமும் வெளியான நிலையில் தற்போது சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் கடந்த 16ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை நடிகர் ஆர்யா தயாரித்திருக்கிறார். படத்தின் டீசர், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இருந்த போதும் போட்ட முதலீட்டை விட சில கோடிகள் ஆர்யாவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் சந்தானத்துக்கும் குறிப்பிட்ட தொகை கிடைத்தது. இதை அடுத்து தனது கடனையும் சந்தானம் அடைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய வீடு ஒன்றைக் கட்டி கிரகப்பிரவேசம் நடத்தி இருக்கிறார் சந்தானம். கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடி நெஸ்ட் லெவல் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய சந்தானம் தான் ஒரு பழைய வீட்டை வாங்கி வேலை பார்த்து குடியேற திட்டமிட்டு இருந்த நிலையில் அந்த வீட்டை ஆரியா இடித்து விட்டதாக கூறியிருந்தார்.
தற்போது அந்த இடத்தில் தான் புதிய வீட்டை கட்டி குடியேறி இருக்கிறார். பழைய வீடு எல்லாம் செட் ஆகாது மச்சி.. பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட சொன்னதே ஆர்யா தான் என சொல்லி இருந்தார். தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் கிடைத்த ஊதியத்தின் மூலம் அந்த வீட்டை கட்டி முடித்ததோடு குடும்பத்தோடு குடி புகுந்து இருக்கிறார். நேற்று வீட்டின் கிரகப்பிரவேசம் நடைபெற்ற நிலையில் பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதை அடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது நாயகனாக மட்டும் நடித்து வரும் சந்தானம். அடுத்ததாக காமெடி கேரக்டர்களிலும் நடிக்க இருக்கிறார். தற்போது சிம்பு படத்தில் அவருடன் இணைந்து நடித்துவரும் நிலையில் ஜெயிலர்-2 படத்திலும், ஆர்யாவின் ஒரு படத்திலும் காமெடியனாக சந்தானம் நடிக்க இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications