சரவண பவன் ராஜகோபாலுக்கு நேற்று இரவு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள்
Recommended Video
சென்னை: சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு நேற்று இரவு திடீர் ஏன மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால், தன்னுடைய ஓட்டலில் பணியாற்றியவரின் மகளான ஜீவஜோதியை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். இதக்காக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சந்தகுமாரை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் அவரை உடனே நீதிமன்றத்தில் சரண் அடையும் படி உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து ராஜகோபால் சென்னை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வரும் போதே தனியார் ஆம்புலன்சில் தான் வந்தார். இதன் பின்னர் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவுப்படி சிறை செல்லும் போதே ராஜகோபாலின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்டான்லி மருத்துமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபாலை போலீசார் அனுமதித்தனர். அவரது உடல் நிலை மோசமாக இருந்து வரும் காரணத்தால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ராஜகோபாலுக்கு இதயம், சிறுநீரகம், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இருப்பதால் அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ராஜகோபாலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகன் சரவணன், உறவினர்கள், மற்றும் உணவ ஊழியக்ரள் என அனைவரும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தனர். அவரது உடல்நிலை தற்போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் உடல்நிலை மோசமாகவே இருப்பதால் ராஜகோபாலை வெண்டிலேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் கொடுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெண்டிலேட்டரில் இருந்து இயல்பு நிலைக்கு அவரது சுவாசம் மாறிய பின்னரே உடல் நிலை குறித்து தெளிவான நிலை தெரியவரும் என தெரிகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications