பந்தயத்தில் காலை வெட்டிய தொண்டர்..போனை போட்ட சசிகலா! நேரிலேயே பார்த்துட்டாரே எடப்பாடி பழனிசாமி
சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் பந்தயத்தில் தோற்றதால் காலை வெட்டிய தூத்துக்குடி அதிமுக தொண்டரை செல்போனில் தொடர்பு கொண்ட சசிகலா அவருக்கு ஆறுதல் கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ அந்த தொண்டரை நேரிலேயே வரவழைத்து நிதி உதவி அளித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சில இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் 3ஆம், 4ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், பல இடங்களில் டெபாசிட்டும் பறிபோனது.

இதனால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. சீனியர்கள் மீது எடப்பாடி பழனிசாமியும், சீனியர்கள் எடப்பாடி பழனிசாமி மீதும் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படலாம் என கூறப்படுகிறது.
காரணம் எடப்பாடி தலைமையேற்றதுக்கு அடுத்து 2019ஆம் ஆண்டிலிருந்து அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. 2019 மக்களவை தேர்தல், 6 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு இடைத் தேர்தல், தற்போது மக்களவை தேர்தல் என எடப்பாடி தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சியை தோல்வியடையச் செய்திருக்கிறார்.
இதனால் அவர் மீது ஏற்கனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய தேர்தலில் அதிமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் சசிகலா மீண்டும் அதிமுகவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காய்களை நகர்த்தி வருகிறார். மேலும் இனியும் பொறுக்க முடியாது, அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென நீண்டதொரு அறிக்கையும் விட்டிருந்தார். இது அதிமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக தொண்டர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார். தூத்துக்குடி திரவியபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் 1972 ஆண்டு முதலே அதிமுகவின் தீவிர தொண்டராக இருந்து வந்திருக்கிறார். தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் அதிமுக 30 இடங்களில் வெற்றிபெறும் என அந்த பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் பேசியிருக்கிறார் செல்வகுமார்.
அப்போது அங்கு வந்த திமுக தொண்டர் ஒருவர் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியாக அதிமுக தோற்றுவிட்டால் எனது காலை வெட்டிக்கொள்கிறேன் என செல்வகுமார் கூறியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஜுன் நான்காம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இதனால் மனமுடைந்த செல்வகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது வலது காலில் வெட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவரை அருகில் இருந்தோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இந்த சம்பவம் அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்வகுமார் குறித்த செய்திகள் சமூக வலைதளங்களிலும் செய்தித்தாள்களிலும் வெளியானது.
இதனையடுத்து செல்வகுமாருக்கு ஆதரவாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் ஓபிஎஸ் டிடிவி தினகரன் அணியினர் சமூக வலைதளங்களில் விமர்சனக் கணைகளை தொடுத்தனர். இந்த நிலையில் அவரை சசிகலா தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார். அதிமுக தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம், நிச்சயம் ஜெயலலிதா பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற அதிமுக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும்.. சின்னம்மா நான் பார்த்துக் கொள்கிறேன்.. தொண்டர்கள் யாரும் இதுபோல செய்யக்கூடாது என பேசினார். இதை அடுத்து இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை கேள்விப்பட்ட அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி நிர்வாகிகள் மூலம் செல்வகுமாரை சேலத்திற்கு வரவழைத்தார். தொடர்ந்து அவரை தனது வீட்டில் சந்தித்த அவர் அவருக்கு நிதி உதவி வழங்கினார். மேலும் அதிமுக நிச்சயம் சோதனைகளில் இருந்து வெளிவரும் இனி இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அவரிடம் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. சாதாரண தொண்டரான செல்வகுமாரை சசிகலா தொலைபேசியில் தான் தொடர்பு கொண்டு பேசினார்.. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ வீட்டிற்க்கே வரவழைத்துள்ளார். இதுதான் உண்மையான தொண்டனுக்கு செலுத்தும் மரியாதை என தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே?










Click it and Unblock the Notifications