பொறுமையா இருங்க.. “இதுதான் எனக்கு பரிசு”.. தொண்டர்களுக்கு சசிகலா விடுத்த முக்கிய கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பிறந்தநாள் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 18) கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே ஏழை எளிய சாமானிய மக்களுக்கு உங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சசிகலா.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி, ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடு என மாஸ் காட்டி வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் சறுக்கலைச் சந்தித்தாலும் கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளைத் தொடர்ந்து வருகிறார். இதனிடையே சசிகலாவும், அதிமுகவை ஒன்றிணைப்பேன் எனக் கூறி வருகிறார். மீண்டும் தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார் சசிகலா. இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி தனது ஆதரவாளர்களுக்கு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Sasikala appealed to her supporters to avoid coming to her home

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, ஜெயலலிதாவின் வழிவந்த சிங்கங்களான, என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எனது பிறந்த நாளன்று, சென்னையில் உள்ள இல்லத்தில் என்னை நேரில் சந்திக்க விரும்புவதாக தொடர்ந்து கோரிக்கை வருவதை அறிந்துகொண்டேன். உங்களுடைய அன்புக்கு நான் என்றைக்குமே அடிமை. உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுவரை நான் மேற்கொண்ட புரட்சிப்பயணங்களின் வாயிலாக எண்ணற்ற கழகத்தொண்டர்களை நேரில் சந்தித்தபோது, நீங்கள் என்னிடம் காட்டிய ஈடு இணையில்லா அன்பையும், எனக்களித்த ஏகோபித்த ஆதரவையும் என்னால் மறக்க முடியாது. அதே போன்று தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும், நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து உங்களையெல்லாம் சந்திக்க இருக்கிறேன். உங்களோடு நேரில் உரையாட இருக்கிறேன்.

ஆகையால், தற்சமயம் எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் அருகில் இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளே, நீங்கள் எனக்கு அளிக்கின்ற, சிறந்த பிறந்தநாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதுவே, மறைந்த நம் இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் எனக்கு அளிக்கும் மிகப்பெரிய ஆசிர்வாதமாகவும், சிறந்த பிறந்தநாள் பரிசாகவும் கருதுகிறேன்.

என் உயிரினும் மேலான கழகத் தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் வர இருக்கிறது. பொறுமையோடு இருங்கள். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என பேரறிஞர் அண்ணா அவர்களின் வாக்கிற்கிணங்க, ''அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்று எம்ஜிஆர் பாடிய வைர வரிகளைப் பின்பற்றி, "மக்களால் நான் மக்களுக்காகவே நான்" என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை, ஒவ்வொருவரும் கடைபிடித்து, "அமைதி, வளம், வளர்ச்சி" என்று நம் ஜெயலலிதா சுட்டிக் காட்டிய வெற்றி இலக்கை, எட்டிப்பிடிப்போம். இந்த மண் நம்மை போன்ற நல்லவர்களை, உண்மையானவர்களை, உறுதியானவர்களை, மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களை எதிர்பார்த்துதான் இன்றைக்கும் காத்து கொண்டு இருக்கிறது. ஆகவே, மண்ணை நேசிப்போம். மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+