பாரத ரத்னா: ஜெயலலிதா-அத்வானி இடையேயான நட்பு எப்படியானது தெரியுமா? லிஸ்ட் போட்டு பாராட்டிய சசிகலா!
சென்னை: நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் அறிவிப்புக்கு அதிமுக பொதுச்செயலாளர் என உரிமை கோரும் சசிகலா பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்ட அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு.எல்.கே.அத்வானி அவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசப் பணியில் அத்வானி: திரு.எல்.கே.அத்வானி அவர்கள் துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். பா.ஜ.கவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார். திரு.எல்.கே.அத்வானி அவர்கள் தனது 14வது வயதிலேயே பொது சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இந்திய ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவர். மேலும், இந்திய தேசத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு திரு.எல்.கே. அத்வானி அவர்களுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.



ஜெயலலிதா- அத்வானி நட்பு பட்டியல்: புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது திரு.எல்.கே.அத்வானி அவர்கள் மிகுந்த அன்பையும், மாறாப்பற்றினையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் திரு.எல்.கே.அத்வானி அவர்கள் மீது அளவு கடந்த நட்பினை கொண்டிருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 'துக்ளக்' தமிழ் வார இதழின் 42-வது ஆண்டு விழாவில்" திரு.எல்.கே.அத்வானி அவர்கள் "புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் ஒரு இயற்கையான கூட்டாளியை நாங்கள் காண்கிறோம்," என்று பேசியதை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். மேலும், மதுரை திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியில் திரு.எல்.கே.அத்வானி அவர்களின் ரத யாத்திரை சென்ற பாதையில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அன்றைய தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வெடிகுண்டை உடனடியாக அகற்றி, பெரும் சதிச்செயல் முறியடிக்கப்பட்டது. இதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திரு.எல்.கே.அத்வானி அவர்கள் நன்றி தெரிவித்ததையும் எண்ணிப்பார்க்கிறேன். அதேபோன்று, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் மீண்டும் வெற்றி பெற்றதற்காக, திரு.எல்.கே.அத்வானி அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததையும் இந்நேரத்தில் மகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறேன்.
போயஸ் கார்டன் விருந்து: மேலும், திரு.எல்.கே.அத்வானி அவர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நேரில் சந்தித்ததையும், அவர்களுக்கு விருந்து அளித்து உபசரித்ததையும் இந்நேரத்தில் எண்ணி பெருமிதம் அடைகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் திரு.எல்.கே.அத்வானி அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், மகிழ்ச்சியோடும், நூறாண்டுகளை கடந்தும், பெருவாழ்வு வாழ வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications