சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இமேஜ் முக்கியம்".. இபிஎஸ்ஸின் அதே அரசியல் ஸ்டைல்.. அஸ்திரத்தை கையில் எடுத்த சசி.. தகிப்பில் அதிமுக

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு அரசியலில் மீண்டும் எப்படியாவது லைம் லைட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பதில் சசிகலா தீவிரமாக இருக்கிறார். இதற்காக கடந்த ஒரு வாரமாக முக்கியமான பல பணிகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார். சசிகலாவின் சமீபத்திய சில மூவ்கள் அவருக்கு ஒருவகையில் "கைகொடுக்க" தொடங்கி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் ஆதரவு, கட்சி பலம் என்பதை எல்லாம் தாண்டி இமேஜ் என்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு அரசியல் தலைவர் மக்கள் மத்தியிலும், நிர்வாகிகள் முன்னிலையிலும் எவ்வளவு வலிமையான தலைவராக பார்க்கப்படுகிறார் என்பதை பொறுத்தே அவருக்கான ஆதரவும், அரசியல் எதிர்காலமும் இருக்கும்.

இதனால்தான் உலகம் முழுக்க எல்லா அரசியல் தலைவர்களும் தங்கள் இமேஜை பலப்படுத்துவதிலும், பாதுகாத்துக் கொள்வதிலும் உறுதியாக இருக்கிறார்கள். இமேஜை பலப்படுத்துவதற்காக பல கோடிகளை செலவு செய்யும் அரசியல் தலைவர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவை ஜூனியர்னு அழைத்த மாஜி அமைச்சர்கள்.. வளர்ச்சியை பிடிக்காத கட்சி நிர்வாகிகள்.. சசிகலாஜெயலலிதாவை ஜூனியர்னு அழைத்த மாஜி அமைச்சர்கள்.. வளர்ச்சியை பிடிக்காத கட்சி நிர்வாகிகள்.. சசிகலா

 இபிஎஸ்

இபிஎஸ்

அப்படி இமேஜ் அரசியலில் கவனம் செலுத்தியவர்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர். தமிழ்நாடு முதல்வராக வந்த பின் தான் செய்த நல்ல விஷயங்கள் மற்றும் நலத்திட்டங்களை மக்கள் முன்னிலையில் கொண்டு செலவதில் இபிஎஸ் தீர்க்கமாக இருந்தார். சாதாரண தலைவராக இருந்துவிட்டு முதல்வராக ஆனவர்.. மக்கள் இடையே ரீச் ஆகும் வகையில் இமேஜ் அரசியலை கையில் எடுத்தார். இதை தவறு என்று சொல்ல முடியாது.. எல்லா அரசியல் தலைவர்களும் செய்ய கூடிய ஒன்றுதான்.

அவசியம்

அவசியம்

அதிலும் அப்போது ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமிக்கு வலுவான இமேஜ் ஒன்று அவசியமாகவும் இருந்தது. அதிமுகவை காக்கவும், ஆட்சியை கடைசி வரை கொண்டு செல்லவும் இபிஎஸ்ஸுக்கு ஒரு வலுவான இமேஜ் தேவைப்பட்டது. தனது ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை மக்கள் இடையே கொண்டு சென்று, தனக்கான இமேஜை எடப்பாடி உருவாக்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

சசிகலா

சசிகலா

தற்போது இதே இமேஜ் அரசியலைத்தான் சசிகலாவும் கையில் எடுத்துள்ளார். சிறையில் இருந்து வந்த பின் சசிகலா அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படவில்லை. தேர்தல் சமயத்தில் அரசியலில் இருந்து "ஒதுங்கி" இருக்க போவதாகவும் அறிவித்தார். அதன்பின் அதிமுகவை தோல்வியை சுட்டிக்காட்டி தற்போது எப்படியாவது கட்சிக்குள் நுழைந்துவிடும் முயற்சியில் இருக்கிறார்.

ஆடியோ

ஆடியோ

தினமும் பல தொண்டர்களிடம் பேசி சசிகலா ஆடியோ வெளியிட்ட போதிலும் கூட அதிமுகவில் அவரால் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. மூத்த தலைவர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லவில்லை, ஆதரவும் தெரிவிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் சசிகலாவிற்கு வலுவான இமேஜ் தேவைப்படுகிறது. இதனால் இபிஎஸ் எடுத்த அதே இமேஜ் அரசியலை சசிகலா கையில் எடுத்துள்ளார்.

இமேஜ் முக்கியம்

இமேஜ் முக்கியம்

அதிமுகவினர் முன்னிலையிலும், தமிழ்நாடு அரசியலிலும் வலுவான இமேஜை உருவாக்கும் வகையில் சசிகலா தொடர்ந்த காய் நகர்த்தி வருகிறார். தேசிய, மாநில ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது, அதில் அதிமுக தலைவர்களுக்கும் தனக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை பேசுவது என்று சசிகலா செயல்பட்டு பேசி வருகிறார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதாவிற்கு நான்தான் எல்லாமுமாக இருந்தேன். எம்ஜிஆருடன் அரசியல் பேசி இருக்கிறேன். கருணாநிதி என்னை பார்த்து வலுவான பெண் என்று குறிப்பிட்டார். அதிமுகவில் என் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் ஜெயலலிதா எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார் என்று சசிகலா தனது அரசியல் லெகசியை முன்னிருத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்.

பேட்டி

பேட்டி

தேசிய ஊடகங்களுக்கும் இதேபோன்ற பேட்டிகளை அளித்து வருகிறார். தொடர்ந்து தொலைக்காட்சி பேட்டிகளில் தான் எப்படி எல்லாம் இருந்தேன், அதிமுகவிற்கு எவ்வளவு முக்கியமான நபர் நான் என்பதை உணர்த்தும் வகையில் சசிகலாவின் பேச்சுக்கள் அமைந்துள்ளன. தொண்டர்கள் மத்தியிலும், நிர்வாகிகள் மத்தியிலும் தன்னுடைய லெகசியை கொண்டு செல்லும் பணியில் சசிகலா இறங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது. இபிஎஸ் ஆட்சிக்கு வந்த புதிதில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்தன.

 சசிகலா

சசிகலா

இப்போது சசிகலாவும் தன்னை வலுவானவராகவும், புறக்கணிக்க முடியாத தலைவராகவும் காட்ட தொடங்கி உள்ளார். தொடக்கத்தில் இவரின் ஆடியோக்கள் கிண்டல் செய்யப்பட்ட நிலையில் சசியின் சமீபத்திய பேட்டிகள் கொஞ்சம் கவனம் ஈர்க்க தொடங்கி உள்ளது. அதிமுக தரப்பும் இவரின் சமீபத்திய பேச்சுக்களால் கொஞ்சம் ஜெர்க்காகி இருப்பதாக தெரிகிறது. புதிய பாணி அரசியலை கையில் எடுத்து இருக்கும் சசிகலா இதில் எப்படி வெற்றிபெறுவார்.. அதிமுகவில் இவரின் பேட்டிகள் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போக போகத்தான் தெரியும்.

English summary
Sasikala focuses on Image Politics to regain her legacy back in AIADMK party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X