''உதயநிதி அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர்''! சனாதன தர்மத்துக்கு ஆதரவாக சசிகலா திடீர் வாய்ஸ்!
சென்னை: சனாதனத்தை பற்றி எதுவுமே தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சராக இருக்கவே தகுதியற்றவர் எனவும் சசிகலா விமர்சித்துள்ளார்.
வீட்டில் ஓய்விலிருந்து வரும் சசிகலா, திடீரென செய்தியாளர்களை சந்தித்து சனாதன தர்மத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விவாதம் எழுந்துள்ளது. சனாதன தர்மத்தை பொறுத்தவரை மக்களை நல்வழிப்படுத்தும் வழிகளை கூறுவதாக சசிகலா தெரிவித்துள்ளார்.

சனாதனத்தை பற்றி உதயநிதிக்கு என்ன தெரியும் என வினவிய அவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு துணிச்சல் போதாது என்றும் விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி மீது முதல்வர் ஸ்டாலின் இதுவரை பாய்ச்சல் காட்டவில்லை என்ற கடுப்பில் அவர் இதனைக் கூறியதாக தெரிகிறது.
அதேபோல் மாதம் ரூ.1000 கொடுக்கும் மகளிர் உரிமைத் திட்டம் குறித்தும் சசிகலா கடுமையாக விமர்சித்தார். அரசின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதாகவும் இதனால் இந்த திட்ட செயல்படுத்த முடியாத திட்டம் எனக் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்படவுள்ள திட்டம் எனக் கூறினார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரியிடமே பணம் கேட்கக் கூடிய அவலம் தான் திமுக ஆட்சியில் நடந்துள்ளதாகவும் அதிமுக ஆட்சியில் இது போல் கட்சிக்காரர்கள் யாரேனும் செய்தால் ஜெயலலிதா சும்மா விட்டிருப்பாரா என்று வினவிய அவர், ஏன் ஸ்டாலினால் ஒழுங்கு நடவடிக்கை கூட திமுககாரர்கள் மீது எடுக்க முடியவில்லை என வினவினார்.

மொத்தத்தில் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியை பற்றியோ, ஓ.பன்னீர்செல்வத்தை பற்றியோ பேசவில்லை. முழுக்க முழுக்க திமுகவையும், முதல்வர் ஸ்டாலினை மட்டுமே விமர்சித்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications