அது நிழல்.. நிஜம் இங்க: அடிச்சுப் பறிக்க நினைச்சா நிலைக்காது- எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா அட்டாக்!
புதுக்கோட்டை : தொண்டர்கள் ஒன்றிணையும் நேரம் வந்துவிட்டது, தலைமைப் பதவியை அடித்து, பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது என சசிகலா தெரிவித்துளார்.
Recommended Video
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அறிவித்த நிலையில், தான் ஈபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இந்த பரபரப்பான சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ள சசிகலா, சுயநலவாதிகளை புறந்தள்ளும் நேரம் வந்துவிட்டது எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்
அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரை நீக்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு. அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வம், தன்னை நீக்கும் அதிகாரம் பழனிசாமிக்கோ, கே.பி.முனுசாமிக்கோ இல்லை என்றும் அவர்களை நான் நீக்குகிறேன் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சசிகலா
ஓ.பிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக அலுவலகம் வந்த நிலையில், கடுமையான மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தற்போது அதிமுகவில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான சசிகலா புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பதவி நிலைக்காது
அப்போது பேசிய சசிகலா, "அதிமுகவின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது, தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. சுயநலவாதிகளை புறந்தள்ளும் நேரம் வந்துவிட்டது. தொண்டர்களின் எண்ணத்திற்கு மாறாக பணபலம், படைபலத்தை கொண்டு பதவியை அடித்துப் பிடிக்கலாம் என்றால் அந்தப் பதவி நிலைக்காது. அது சட்டப்படி செல்லாது.

அழிக்க நினைத்தவர்கள் வாழ முடியாது
சட்டத்திற்கு புறம்பான தலைமையை தொண்டர்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. இருபெரும் தலைவர்களின் ஆசியால் இந்த இயக்கம் மீண்டும் அதே பொலிவோடு மீண்டெழும். நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை தொலைத்தவர்களின் பின்னால் குதிரைகள் கூட செல்லாது. காட்சிகள் மாறினாலும் கொள்கைகளை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள். இயக்கத்தை அழிக்க நினைத்தவர்கள் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications