சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனியும் இதையெல்லாம் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியாது.. சசிகலா ஆக்ரோஷம்!

Google Oneindia Tamil News

சென்னை: இனியும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது என சசிகலா ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Jayalalitha சமாதியில் அஞ்சலி செலுத்திய Sasikala உறுதிமொழி | Oneindia Tamil

    அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதாக ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் அறிவித்திருந்தனர்.

    அதன்படி நேற்று முன் தினம் தலைமை அலுவலகத்தில் வேட்புமனுவுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று முன் தினம் சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஓமப்பொடி பிரதாப் சிங் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பம் வாங்க சென்றிருந்தார்.

    10 மணிக்கு மேல் செல்போனே பேச மாட்டேன்.. சசிகலா ஆதரவு ஆடியோ குறித்து செல்லூர் ராஜு விளக்கம் 10 மணிக்கு மேல் செல்போனே பேச மாட்டேன்.. சசிகலா ஆதரவு ஆடியோ குறித்து செல்லூர் ராஜு விளக்கம்

    விண்ணப்பம் தர மறுப்பு

    விண்ணப்பம் தர மறுப்பு

    அப்போது ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மட்டும் விண்ணப்பம் தர முடியாது. இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் சேர்த்து இன்னொருவருடன் வந்தால்தான் தர முடியும் என கூறியதாக தெரிகிறது. இதனால் அவருக்கு விண்ணப்பம் மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டுதான் தேர்தல் நடத்த வேண்டும்.

    சட்டத்திற்கு புறம்பானது

    சட்டத்திற்கு புறம்பானது

    எனவே அதிமுகவில் நடக்கும் இந்த உள்கட்சி தேர்தல் சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்திருந்தார். அப்போது அங்கிருந்த அதிமுக தலைமை மேலாளர் உள்ளிட்ட 10 பேர் ஓமப்பொடியை பேச விடாமல் தடுத்து அவரை அடித்து விரட்டியடித்தனர். மேலும் நேற்றைய தினம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஈபிஎஸ்ஸும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    சசிகலா

    சசிகலா

    அவர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவர். இந்த பதவிகளுக்கு போட்டியிட 5 க்கும் மேற்பட்டோர் வந்திருந்தும் அவர்களுக்கு வேட்புமனு மறுக்கப்பட்டது. இதுகுறித்து சசிகலா வெளியிட்ட அறிக்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ தொண்டர்களுக்கான ஒரு இயக்கமாகவும்‌, ஏழை எளிய மக்களுக்கான ஒரு இயக்கமாகவும்‌ நம்‌ இரும்பெரும்‌ தலைவர்களின்‌ தலைமையில்‌ செயல்பட்டு வந்தது. நாட்டில்‌ உள்ள அனைத்து அரசியல்‌ கட்சியினரும்‌ பார்த்து பொறாமை படும்‌ அளவுக்கு ஒளிர்ந்த நம்‌ இயக்கத்தின்‌ இன்றைய நிகழ்வுகளைப்‌ பார்க்கும்போது ஒவ்வொரு தொண்டனும்‌ வெட்கப்படவேண்டிய ஒன்றாக இருக்‌கிறது. என்றைக்கு நம்‌ புரட்சித்தலைவி நம்மை விட்டு சென்றார்களோ அன்று முதல்‌ இன்று வரை நம்‌ இயக்கத்தில்‌ நடைபெறும்‌ செயல்களை பார்க்கும்போது என்‌ மனது மிகவும்‌ வேதனைப்படுகிறது.

    தொண்டர்கள்

    தொண்டர்கள்

    எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும்‌ தொண்டர்களை மதித்து அவர்களுடைய நலனில்‌ அக்கறை காட்டும்‌ போது தான்‌, அதை பார்க்கும்‌ மற்றவர்களுக்கும்‌ அந்த இயக்கத்தின்‌ மீது ஒரு நல்ல எண்ணமும்‌, நம்பிக்கையும்‌ வரும்‌. எந்த ஒரு இயக்கத்திற்கும்‌ கொடி பிடிக்கும்‌ தொண்டர்கள்‌ தான்‌ தேவையே ஓழிய தடி எடுக்கும்‌ குண்டர்கள்‌ அல்ல.

    எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம்

    எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம்

    ஓமபொடி பிரசாத்‌ சிங் புரட்சித்தலைவரின்‌ அன்பைப்‌ பெற்றவர்‌. அதுமட்டுமல்ல பிரசாத்‌ சிங்,‌ தலைவர்‌ கையால்‌ தாலி எடுத்து கொடுத்தால்தான்‌ தனக்கு திருமணம்‌ என்று திருமண மேடையில்‌ வெகுநேரம்‌ காத்திருந்து, பின்னர்‌ தலைவரும்‌ இந்த எளிய தொண்டனின்‌ அன்பால்‌ கட்டுப்பட்டு திருமண மேடைக்கு வந்து தாலி எடுத்து கொடுத்த பின்னர்‌ திருமணம்‌ செய்து கொண்டவர்‌. மேலும்‌, புரட்சித்தலைவர்‌ அவர்கள்‌ கட்‌சி தொடங்கிய சிறிது காலத்தில்‌ மீண்டும்‌ திமுகவோடு இணைவதற்காக பேச்சுவார்த்தையில்‌ இருந்த வேளையில்‌ பிரசாத்‌ சிங்‌, முசிறிப்புத்தன்‌ ஆகியோரை திமுகவினர்‌ தாக்‌கயதை பார்த்தவுடன்‌, திமுகவுடன்‌ மீண்டும்‌ சேர்வது என்ற முடிவை கைவிட்டு விட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தை தொடர்ந்து வழி நடத்தி வெற்றிகண்டார்‌.

    வேதனையளிக்கிறது

    வேதனையளிக்கிறது

    அதே போன்று, எளிய தொண்டரான ராஜேஷூம்‌ இன்றைக்கு தலைமைக்‌ கழகத்துலேயே தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. இன்று, நம்‌ தொண்டர்களின்‌ நிலையை இருபெரும்‌ தலைவர்களும்‌ கண்ணீரோடுதான்‌ பார்த்துக்கொண்டு இருப்பார்கள்‌. அவர்கள்‌ கட்டி காத்த இந்த இயக்கத்தை சிரழித்துவிடாதீர்கள்‌. இனியும்‌ இதை எல்லாம்‌ பார்த்துக்கொண்டு என்னை போன்றவர்களால்‌ சும்மா இருக்க முடியாது. தொண்டர்கள்‌ மீது விழும்‌ ஒவ்வொரு அடியும்‌ ஒட்டுமொத்த கழக உடன்பிறப்புகளின்‌ மீது விழுந்த அடியாகவும்‌, என்‌ மீது விழுந்த அடியாகவும்தான்‌ நான்‌ நினைக்கிறன்‌.

    ஆணிவேரான தொண்டர்கள்

    ஆணிவேரான தொண்டர்கள்

    ஒரு தலைமையால்தான்‌ அந்த வலியை உணரமுடியும்‌. ஆணிவேரான தொண்டர்கள்‌ இருந்தால்தான்‌ இந்த இயக்கம்‌ ஆலமரமாக தழைத்தோங்கும்‌. இதை ஒவ்வொருவரும்‌ மனதில்‌ வைத்து, நம்‌ தலைவர்கள்‌ காட்டிய வழியில்‌, ஒற்றுமையுடன்‌ இருந்தால்‌ தான்‌ வரும்‌ நாட்களில்‌, நம்‌ எதிரிகளை வெல்ல முடியும்‌ என்பதன்‌ அவசியத்தை உணர்ந்தாக வேண்டும்‌ என்று கேட்டு கொள்கிறேன்‌. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    V.K.Sasikala says that i couldnot see all these things by folding my hands.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X