நிம்மதியே போச்சு.. மீண்டும் ‘அது’ நடக்க வேண்டும்! நாடாளுமன்ற தேர்தலுக்கு களமிறங்கிய சசிகலா! என்னாச்சு?
சென்னை : திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது எனவும் மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும் என சசிகலா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுகவை பொருத்தவரை எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை சுற்றியே அரசியல் புள்ளி சுழன்று கொண்டிருக்கிறது ,
சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அதிமுக நிர்வாகிகள் கூறி வந்தாலும், எந்த ஒரு நிர்வாகியும் ஒருமுறை கூட அவரது பெயரை உச்சரிக்காமல் கடந்து சென்று விட முடியாது. அந்த அளவுக்கு தனது அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார் சசிகலா.

அதிமுக விவகாரம்
இந்நிலையில் அதிமுகவில் இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என்ற சர்ச்சை அதிகமாகி வரும் நிலையில், இது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிமுக நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென 3வது கட்ட புரட்சிப் பயணத்தை சசிகலா மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவர் பயணத்தை தொடங்கியுள்ளார். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் என்றே இந்த பயணத்தை சசிகலா நடராஜன் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சசிகலா
வேன் மூலம் செங்கல்பட்டு மறைமலைநகர் சிங்கம்பெருமாள் கோவில் பழைய பேருந்து நிலையம் திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட சசிகலாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே 100 அடி உயரத்தில் இருந்து அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பல இடங்களில் தொடர்ந்து வரவேற்பு அளித்தபடி உடன் வந்தனர். இதில் சில அதிமுக பிரமுகர்களும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு இல்லை
தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய அவர்," கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தபோது மக்களுக்காக நூற்றுக்கணக்கான திட்டங்களை அறிவித்தார். பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுத்தார். ஆனால் திமுக அத்தியாவசிய பொருட்களின் விலை சொத்து வரி மின் கட்டணம் என அனைத்துமே உயர்த்தப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தற்போது பெண் காவலர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலையாக மாறி இருக்கிறது.

நிம்மதி இல்லை
அதிமுக ஆட்சியில் காவலர்கள் காலரை தூக்கி விட்டு நடந்தார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. தமிழகத்தில் எங்கும் போதை பொருள் கிடைக்கும் நிலை இருக்கிறது. வரி என்ற பெயரில் 20 மாதங்களாக திமுக மக்களிடமிருந்து வசூலிக்கிறது தவிர மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். இனி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழக மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். அதிமுக ஆட்சியில் தான் ஏழை மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.

கடும் உழைப்பு
எனவே கட்சியினர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தாலும் மக்களுக்காகவே நாம் சேவை செய்ய வேண்டும். ஜெயலலிதா ஆட்சி அமைந்த உடன் இந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலேயே நிறைவேற்றி தரப்படும்' என்றார்.

ஆளுநர் விவகாரம்
திருக்கழுக்குன்றம் பகுதியில் பிரச்சாரத்திற்கு பிறகு சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஆளுநர் உரை அரசால் தயாரிக்கப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஏதேனும் மாற்றங்கள் செய்தால், அதற்கேற்ப உரை தயாரிக்கப்பட்டு மீண்டும் ஆளுநர் பார்வைக்கு அனுப்பப்படும். அதன் பிறகே, ஆளுநர் உரை அச்சுக்கு அனுப்பப்படும். ஆனால் தற்போது அப்படி நடந்ததா என தெரியவில்லை என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications