இது லிஸ்ட்லயே இல்லையே.. சசிகலா 'அடுத்த' அரசியல் பிளான்.. டிடிவி தினகரன் சொன்ன தகவல்.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா பற்றி யாருமே நினைத்துப் பார்க்காத ஒரு தகவலை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்த நிலையில், பெங்களூரில் உள்ள ரிசார்ட்டில் ஓய்வெடுத்து வருகிறார் சசிகலா.

விடுதலையாக கூடிய நேரத்தில் திடீரென கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். எனவே வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் ரிசார்ட் ஒன்றில் சசிகலா தங்கியிருக்கிறார்.

சாத்தியம் இல்லையே

சாத்தியம் இல்லையே

பிப்ரவரி 8ம் தேதி, அதாவது நாளை மறுநாள், திங்கட்கிழமை, சசிகலா சென்னை வருவார் என்று ஏற்கனவே டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். சசிகலா சென்னை வந்தாலும் அது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்துமே தவிர அவர் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது சாத்தியம் கிடையாது என்பதுதான் சட்ட வல்லுநர்கள் கருத்தாக இருந்தது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்


ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் சசிகலா. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் 8வது பிரிவின் கீழ்,
சிறையிலிருந்து விடுதலையான தேதியிலிருந்து, அடுத்த ஆறு வருடங்களுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதுதான் சட்டம். ஆனால், டிடிவி தினகரன் அளித்துள்ள ஒரு பேட்டி இந்த யூகங்கள் அனைத்தையும் தவிடுபொடியாகியுள்ளது.

சசிகலா தேர்தலில் போட்டியிடுவார்

சசிகலா தேர்தலில் போட்டியிடுவார்

பல்வேறு கோவில்களுக்கும் சென்று தொடர்ந்து வழிபாடுகளை நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். அந்த வகையில் நேற்று தென்காசிக்கு சென்றிருந்தார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், இந்த சட்டசபை தேர்தலின்போது "சசிகலா போட்டியிடுவார்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அவர் போட்டியிட்டால் யார் முதல்வர் வேட்பாளர்? என்ற கேள்விக்கு, அதை சசிகலா தான் முடிவு செய்வார் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரன் கருத்தால் குழப்பம்

தினகரன் கருத்தால் குழப்பம்

தினகரன் கூறியதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கிங்காக சசிகலா மாற முடியாது. கிங் மேக்கராக வேண்டுமானால், இன்னொருவரை கைகாட்டி ஆட்சி நடத்த முடியும். அதுவும் அதிமுக அவர் வசம் போனால்தான் நடக்கும் என்றுதான் சசிகலா பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சட்ட வல்லுநர்கள் கருத்தும் அப்படித்தான் இருந்தது. ஆனால் தினகரன் திடீரென சசிகலாவை தேர்தலில் போட்டியிடுவார் என்று, கூறியிருப்பது பெரும் புதிரையும் தமிழக அரசியலில் புதிய பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிம் முன்னுதாரணம்

சிக்கிம் முன்னுதாரணம்

தினகரன் இவ்வாறு ஒரு கருத்தை கூறியதன் பின்னணியில், சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் வழக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகிறார்கள். பிரேம் சிங் தமாங், கால்நடை துறை அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது 1996 ஆம் ஆண்டு. இந்த வழக்கும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு போல நீண்ட காலமாக நடைபெற்றது. இவர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஓராண்டு தண்டனை விதித்தது. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சிறைதண்டனை முடித்துக்கொண்டு அவர் வெளியே வந்தார்.
தமாங் கட்சி வெற்றி தமாங் கட்சி வெற்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அடுத்த ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறினார்கள். 2019 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இவரது தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பாஜகவோடு கூட்டணி வைத்து, மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 17 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது.

சலுகை வழங்கிய தேர்தல் ஆணையம்

சலுகை வழங்கிய தேர்தல் ஆணையம்

ஆனால், முதல்வராக வேண்டுமானால் அடுத்த 6 மாதங்களுக்குள் சட்டசபையில் ஏதாவது ஒரு அவையில் இவர் உறுப்பினராக வேண்டும் என்பது அவசியம். எனவே என்ன செய்வது என்று யோசித்து தேர்தல் ஆணையத்தை அணுகினார். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தனக்கு ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட கூடாது என்று விதிக்கப்பட்ட தடையை தளர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதை தேர்தல் ஆணையமும் பரிசீலித்தது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். தளர்வு கொடுத்தார்கள் தளர்வு கொடுத்தார்கள் பரிசீலித்த தேர்தல் ஆணையம் அந்த சலுகையை இவருக்கு வழங்கியது.

சசிகலாவுக்கு சலுகை

சசிகலாவுக்கு சலுகை

தமாங் வழக்கை முன்னுதாரணமாக சொல்லி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் சலுகை வழங்க வாய்ப்பு உள்ளதா, இதற்கான நடவடிக்கைகள் துவங்கியதால் அந்த நம்பிக்கையில் டிடிவி தினகரன் இவ்வாறு கூறியுள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால் சசிகலாவுக்கு அதுபோன்ற சலுகை வழங்கப்பட வாய்ப்பு மிக குறைவு என்பதுதான் சட்ட வல்லுநர்கள் கருத்து. ஆக மொத்தம், தினகரன் ஏன் இப்படி சொன்னார் என்ற கேள்வி அதிமுக வட்டாரத்தில் எதிரொலித்தபடியே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+