பக்ரீத் என்றால் என்ன தெரியுமா? சொல்கிறார் சசிகலா.. முஸ்லிம்களின் பாதுகாவலர் ஜெயலலிதா என புகழாரம்
சென்னை: பக்ரித் நாளில் தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி, மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என சசிகலா வாழ்த்தி இருக்கிறார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் அவர், "தியாகத்தை போற்றும் திருநாளாம் பக்ரீத் பெருநாளை கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த "பக்ரீத் திருநாள்" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு துரோகங்கள் அழியட்டும், சகோதரத்துவமும், ஈகை குணமும் தழைத்தோங்கட்டும், தியாக சிந்தனைகள் மேலோங்கட்டும். மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்நாளில் உறுதியேற்போம்.
இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும், இஸ்லாமியர்கள் பயன் பெரும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அளித்து அவர்களின் தெஞ்சங்களில் நீக்கமற நிறைந்துள்ளார்கள் என்பதை இந்நாளில் பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த சிறப்புக்குரிய நாளில் தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி, மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்நாளில் இறைவனின் அருளை பெற சிறப்பு தொழுகை செய்து, அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கு உணவளித்து, உற்றார் உறவினர்களுடன் ஒன்று கூடி உற்சாகத்தோடு கொண்டாடி மகிழும் அன்புள்ள இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications