திமுக 112.. அதிமுக 52.. முடிவை நிர்ணயிக்க போகும் 70 இழுபறி தொகுதிகள்.. சத்தியம் சர்வே முடிவுகள்!
சென்னை: சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்பின்படி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறப்பட்டுள்ளது .
தமிழக சட்டசபை தேர்தலில் எந்தெந்த கட்சி எவ்வளவு இடங்களை பிடிக்கும் என்று சத்தியம் தொலைக்காட்சி கருத்த கணிப்புகளை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுக்க தொகுதி வாரியாக சர்வே செய்து சத்தியம் தொலைக்காட்சி கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதில் பல இழுபறி நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சத்தியம் கருத்து கணிப்பின்படி அதிமுகவை விட திமுகவே அதிக இடங்களை வெல்லும்.

கணிப்பு
தமிழக சட்டசபை தேர்தல் சத்தியம் கருத்து கணிப்பின்படி திமுக 112 இடங்களில் வெல்லும், அதிமுக 52 இடங்களில் வெற்றிபெறும், 70 தொகுதிகளில் இழுபறி நீடிக்கும். இதில் 70 இழுபறி தொகுதிகளில் 38 திமுகவுக்கு சாதகமாக உள்ளது, 29 அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது என்று சத்தியம் தொலைக்காட்சி கூறியுள்ளது.

தெற்கு மண்டலம்
மண்டல வாரியாக தெற்கு மண்டலத்தில் திமுக மிகவும் வலிமையாக இருக்கிறது. எப்போதும் போல தெற்கு மண்டலத்தில் இந்தமுறையும் திமுகவே வெற்றிபெறும். தெற்கு மண்டலத்தில் திமுக 31 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 9 இடங்களில் வெற்றிபெறும். 18 இழுபறி நீடிக்கும்.

கொங்கு
எப்போதும் கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் அதிமுக இந்த முறை கொங்கில் சரிவை சந்தித்து இருக்கிறது. கொங்கு மண்டலம்: திமுக 28 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 16 இடங்களில் வெற்றிபெறும். 17 இழுபறி நீடிக்கும்.

டெல்டா
டெல்டா மண்டலத்தில் இந்த முறையும் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற உள்ளது. டெல்டா மத்திய மண்டலம்: திமுக 22 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறும். 7 இழுபறி நீடிக்கும்.வடக்கு மண்டலம்: திமுக 23 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 17 இடங்களில் வெற்றிபெறும். 22 இழுபறி நீடிக்கும்.

சென்னை
சென்னை மண்டலம்: திமுக 8 இடங்களில் வெற்றிபெறும். அதிமுக 2 இடங்களில் வெற்றிபெறும். 6 இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications