அதிமுகவுக்கு "அல்வா" கொடுக்க வரும் திவ்யா.. சத்யராஜ் மகளின் அதிரடி.. திமுகவின் பிரச்சார பீரங்கி?
டிகர் சத்யராஜ் மகள் திமுகவில் இணைவதாக கூறப்படுகிறது
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா விரைவில் திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ்... நடிகர் என்பதையும் தாண்டி, சமூக செயற்பாட்டாளராகவும் வலம் வருபவர்.. குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை அதிக அளவில் வலியுறுத்தி வருபவர்.. பெரியாரின் தீவிரமான தொண்டரும்கூட..
2 நாட்களாக ஒரு செய்தி சோஷியல் மீடியாவை சுற்றி கொண்டிருக்கிறது.. அதாவது சத்யராஜின் மகள் திவ்யா அரசியலுக்கு வரப்போவதாகவும், அப்படி அரசியலுக்கு வருவதாக அறிவித்தால், அடுத்த தேர்தலில் சத்யராஜ் மகளுக்கு பிரச்சாரம் செய்வார் என்றும் கசிந்தது.

சத்யராஜ்
இதுகுறித்து திவ்யாவிடமும், சத்யராஜிடமும் நேரடியாகவே கேட்கப்பட்டது.. அதற்கு திவ்யா சொல்லும்போது, "அப்பா என்னுடைய உயிர் தோழன்.. என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார்... ஆனால் ஒரு முக்கியமான விஷயம், நான் ஒரு சுயாதீனமான நபர்.. சொந்த வளர்ச்சிக்காக ஒருபோதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்" என்றார் திவ்யா.

அப்பா
அதுபோலவே சத்யராஜ் சொல்லும்போது, "என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள அப்பா நான்.. என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன்... திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு அப்பாவாகவும், நண்பனாகவும் பக்க பலமாக இருப்பேன். கண்டிப்பாக என் மகளுக்காகப் பிரச்சாரம் செய்வேன்" என்றார்.

திமுகவா?
இப்படி மாறி மாறி இருவரும் சொன்னார்களே தவிர, எந்த கட்சியில் திவ்யா சேரப் போகிறார் என்பதை மட்டும் சொல்லவே இல்லை.. அதுகுறித்து விரைவில் அறிவிக்க போவதாகவும் கூறப்பட்ட நிலையில்தான், திமுகவில் அவர் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன..

மகிழ்மதி
திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர்... இந்த கொரோன காலத்தில், மக்களுக்காக ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க "மகிழ்மதி" என்ற இயக்கத்தை ஆரம்பித்து செயல்படுத்தி வருபவர்.. சில வருடங்களுக்கு முன்பு, மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா பிரதமர் மோடிக்கு ஒரு லெட்டர் எழுதியிருந்தார்.. அதன்மூலம்தான் திவ்யா மீது மக்களின் பார்வை குவிந்தது..

கோரிக்கை
அந்த லெட்டரும் சோஷியல் மீடியாவில் படுவைரலானது.. அதுமட்டுமல்ல, கொரோனா நேரத்தில் அதிக அளவு இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடியாகவே நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருந்ததும் பரபரப்பாக பேசப்பட்டது.

கருணாநிதி
இந்த அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்த்த திவ்யா, அரசியலுக்குள் அதுவும் திமுகவுக்குள் காலடி வைக்க போவது மிகப்பெரும் எதிர்பார்ப்பை தந்து வருகிறது.. அதேபோல, சத்யராஜுக்கும் திமுகவுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இருந்து வருகிறது.. கலைஞர் கருணாநிதி எழுதிய பாலைவன ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சத்யராஜ்..

தத்துவம்
கருணாநிதி இறந்தபோது சத்யராஜ் ஒரு நிகழ்ச்சியில், "மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னை தானே அழைத்துக் கொண்டவர் கருணாநிதி... அங்குதான் அவர் தன்னை பெரியாறு தொண்டன் என்று நிரூபித்துக் கொண்டார்... தலைவர் கலைஞர் தமிழ்நாட்டுக்கு மட்டும் முதலமைச்சர் கிடையாது. முதலமைச்சருக்கு எல்லாம் முதலமைச்சர்... ஏனென்றால் சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர் கருணாநிதி. கலைஞர் கருணாநிதி என்பது வெறும் உயிர், சதை, இரத்தம் இருக்கும் மனிதன் அல்ல. அவர் ஒரு தத்துவம். தத்துவம் ஒருபோதும் அழிவதில்லை" என்றார்.

பிரச்சாரம்
அதுமட்டுமல்ல, "சமூகநீதியால் கட்டமைக்கப்பட்டுள்ள திமுகவை வீழ்த்த யாராலும் முடியாது.. தமிழகத்தில் உருவானதாக கூறப்பட்ட வெற்றிடம் தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும், அந்த வெற்றிடத்தை நிரப்பியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்" என்றும் பெருமிதம் பொங்க கூறியவர். அந்த வகையில் திமுகவுக்காகவும், தன் மகளுக்காகவும் சத்யராஜ் பிரச்சாரம் செய்ய வந்தால், அது மேலும் அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது.. ஆகமொத்தம், திமுகவும் பாஜகவை போலவே ஸ்டார் பிரமுகர்களை அரசியல் கட்சியில் இறக்க தயாராகிவிட்டதாக தெரிகிறது!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications