சென்னைக்கு அழைத்து வரப்படும் சவுக்கு சங்கர்.. போலீசார் புது முடிவு.. ஏன்?
சென்னை: சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து அழைத்து வரப்பட்டு உள்ளார்சவுக்கு சங்கர். கோவை மத்திய சிறையில் இருந்து பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார். சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காக, கோவை மத்திய சிறையில் இருந்த சவுக்கு சங்கர் நேற்று கைதானார்.

சென்னையில் பதிவான 2 வழக்குகளில் ரிமாண்ட் செய்ய கோவை சிறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார் சவுக்கு சங்கர்.
கோவை சிறை: முன்னதாக
சென்னை: கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை (மே 09) தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் , சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை. சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்? என பதிலளித்த அவர், அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம் எனவும், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கை படி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications