Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலையிலேயே ராஜேஸ்வரி பிரியாவுக்கும் டவுட் வந்தாச்சு! சவுக்கு சங்கர் கேஸுக்குள் வந்த "2 பேர் யார்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுக்கு சங்கர வழக்கில் இன்னும் எந்தவிதமான இறுதி உத்தரவுகள் பிறப்பிக்கப்படாத நிலையில், மிக முக்கியமான சந்தேகம் ஒன்றை அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் ராஜேஸ்வரி பிரியா எழுப்பியிருக்கிறார்.

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறி, அவருடைய அம்மா சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவானது நேற்றுமுன்தினம், நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Savukku Shankar Case in High Court and what did Rajeswari Priya ask about Savukku Shankars MHC Case

விசாரணை: அப்போது விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் இடையே மாறுபட்ட கருத்து நிலவுவதால் 3வது நீதிபதி அமர்த்தப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வரை ஒருமையில் பேசிய விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன் இறுதி விசாரணை நடத்தலாமா? என்ற விஷயத்தில்தான் நீதிபதிகளிடையே இப்படி மாறுபட்ட கருத்து எழுந்துள்ளது..

பதில் மனு: "தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இந்த வழக்கில் இறுதி விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியமில்லை, தமிழக அரசு பதிலளித்தபிறகு வழக்கை விசாரிக்கலாம்" என்று நீதிபதி பாலாஜி சொன்னார்..

ஆனால், "அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொட்ரபாக என்னை சந்தித்து பேசினார்கள்.. அதனால்தான் இந்த வழக்கை அவசரமாக விசாரித்தேன்.. முறையான விதிகள் பின்பற்றாமல், குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதால், குண்டர் சட்டத்தை ரத்து செய்கிறேன்.. தமிழக அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படாவிட்டாலும், உடனடியாக இறுதி விசாரணை நடத்தலாம்" என்று நீதிபதி சுவாமிநாதன் சொன்னார்.. இப்படி இரு தரப்பிலுமே

3வது நீதிபதி: இப்படி 2 நீதிபதிகளளு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருப்பதால், இந்த வழக்கை 3வதாக நீதிபதி அமர்வுக்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் பரிந்துரை செய்துள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த 2 மேல் மட்ட நபர்கள் யார் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது.. இதுகுறித்து அந்நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, அறிக்கை ஒன்றினை வெளியிட்டு நறுக்கென கேள்விகளை கேட்டுள்ளார். அது இதுதான்:

அதிர்ச்சி: "24/05/2024 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அவர்களின் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கும் போது நீதிபதி திரு சுவாமிநாதன் அவர்கள் கொடுத்த தகவல் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.

நீதிபதி அவர்கள் உத்தரவை பிறப்பிக்கும் போது தன்னை மேல்மட்டத்தில் இருந்து இரண்டு நபர்கள் இந்த வழக்கை விசாரிக்காமல் இருக்க அழுத்தம் கொடுத்தனர் என்றும் அந்த அழுத்தத்தினால் இந்த வழக்கை நான் விசாரிக்காமல் இருந்தால் அரசியல் சாசன கடமைகளில் இருந்து தவறியவன் ஆகிவிடுவேன் என்பதனால் தான் இந்த வழக்கை கையில் எடுத்தேன் எனவும் கூறியுள்ளார்.

தண்டனை: யார் அந்த இரண்டு மேல் மட்ட நபர்கள்? மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே உங்களை நான் பாராட்டுகிறேன். அதே சமயம் அந்த இரண்டு நபர்கள் யார் என்பதை வெளியிட்டு அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுக்க தாங்கள் முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லையென்றால் நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுத்தால் அவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது என்பது போல் மக்கள் மத்தியில் தவறான உதாரணமாக அமையும்.

ஒன்று தாங்கள் அழுத்தம் கொடுத்த அந்த இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது தலைமை நீதிபதிக்கு இவற்றைக் குறித்து கடிதம் எழுதிவிட்டு வழக்கிலிருந்து தங்களை விடுவித்து இருக்க வேண்டும் அதாவது இந்த தகவலை பொதுதளத்தில் கூறாமல் சட்ட நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

மரியாதை: இவ்வாறு பொது தளத்தில் அழுத்தம் கொடுத்தார்கள் என்று மட்டும் கூறிவிட்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது நீதிமன்றத்தின் மாண்பும் நீதிபதிகள் மீதான மரியாதையும் மக்கள் பார்வையில் குறைய தொடங்கிவிடும்" என்று தெரிவித்திருக்கிறார். ராஜேஸ்வரி பிரியா கேட்ட இதே சந்தேகத்தைதான், கடந்த 2 நாட்களாகவே பொதுமக்கள் தரப்பிலும் எழுந்து வருகிறது..

இவ்வளவு அவசரம் அவசரமாக சவுக்கு சங்கர் வழக்கை எடுத்து, தீர்ப்பும் வழங்கிட வேண்டிய கட்டாயம் என்ன வந்தது? நீதிபதியை, அவரது அறையிலேயே தனியாகச் சந்தித்து, நீதிபதிக்கே மிரட்டல் தந்த 2 பேரின் பெயர்களை நீதிபதி ஏன் வெளிப்படையாகச் சொல்லவில்லை? நீதிமன்ற நடைமுறை என்பது, நீதிபதியை தனியாக சந்தித்து யாரோ சிலர், என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அமையுமா? என்றெல்லாம் திராவிடர் கழக மூத்த தலைவர் சுப.வீரபாண்டியனும் ஏற்கனவே கேட்டிருந்தார்.

கேள்வி: இதே சந்தேகத்தைதான் ராஜேஸ்வரி பிரியாவும் எழுப்பியிருக்கிறார்.. மொத்தத்தில், சவுக்கு சங்கர் வழக்கில், 3வது நீதிபதியின் உத்தரவு எப்படி இருக்க போகிறது என்பதைவிட, நீதிபதி சுவாமிநாதன் சொன்ன அந்த 2 பேர் யார்? என்பதைதான், ராஜேஸ்வரி பிரியா போன்றோர், அழுத்தமான கேள்விகளால் துளைத்தெடுத்து வருகிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+