எச்ஐவி சவுக்கு சங்கருக்கா? ரிப்போர்ட்டில் கையெழுத்து எங்கே? தூக்கி உள்ளே வெக்கணும்.. யார்னு பாருங்க
சென்னை: சவுக்கு சங்கருக்கு எச்ஐவி பாதிப்பு உள்ளதாக கசிந்த மெடிக்கல் ரிப்போர்ட்டை பார்த்ததுமே, டாக்டர் காந்தராஜ் கொந்தளித்துவிட்டார்.. இந்த ரிப்போர்ட்டை வெளியிட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஹெச்ஐவி தொற்று உள்ளதாகவும், இதுமருத்துவ பரிசோதனை அறிக்கை என்றும் கூறி தகவல்கள் சோஷியல் மீடியாவில் பரவின... இது தொடர்பாக சில அரசியல் பிரமுகர்களும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடவும், பரபரப்புகள் பற்றிக்கொண்டன.

சவுக்கு சங்கர்: இதையடுத்து, தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதித்து இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சவுக்கு சங்கர் மறுத்து, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், "எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அப்போது எனது சிகிச்சைக்கான ஆவணம் தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது.
அந்த திருடப்பட்ட ஆவணத்தினை மாற்றி, நான் எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று போலியாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது. இந்த மருத்துவ ஆவணம் முற்றிலும் போலியானது ஆகும்.
தவறான தகவல்: நான் எச்.ஐ.வி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பற்றிய செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது ஆகும். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து, Youth Central Tamil என்ற சேனலுக்கு மூத்த அரசியல் விமர்சரும், மருத்துவருமான டாக்டர் காந்தராஜ் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியின்போது, "எச்.ஐ.வி. ரிப்போர்ட்"டை பார்த்ததுமே கொந்தளித்து போன டாக்டர் காந்தராஜ் சொன்னதாவது:
லேப் ரிப்போர்ட்: "இந்த ரிப்போர்ட்டில் எச்ஐவி பாசிட்டிவ் என்று வந்திருக்கு.. முதல்ல இந்த லேப்பாரெட்டரிக்காரனை அரெஸ்ட் பண்ணணும்.. சம்பந்தமே இல்லாத நபர்கிட்ட இந்த ரிப்போட்டினை எப்படி லேப் தந்தது? அந்த பெண்ணுக்கு இந்த ரிப்போர்ட் எப்படி கிடைத்தது? முதல்ல இந்த பெண் யார்? சவுக்கு சங்கர் ரிப்போர்ட்டை இந்த பெண் ஏன் வாங்கணும்?
நான் ஏற்கனவே எச்ஐவி அதிகாரியாக வேலைபார்த்தவன்.. எக்ஐவி பேஷன்ட்களை பார்த்திருக்கிறேன். என்னுடைய நோயாளிகள் மூலமாகத்தான், எச்ஐவி என்பது இந்தியாவிலேயே முதன்முதலாக அன்று கண்டுபிடிக்கப்பட்டது. நம்முடைய நாடு ஒழுக்கத்தில் சிறந்தது.. கற்பில் சிறந்தவர்கள் வாழ்வதால், இந்தியாவில் எச்ஐவி வராது என்றெல்லாம் சொன்னார்கள்.. ஆனால், முதன்முதலில் 30 பேருக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்தது.. இவர்கள் அனைவரும் விலைமாதர்கள் ஆவர்.
எச்ஐவி நோய்: எப்போதுமே எச்ஐவி பேஷன்ட் பற்றி வெளியே சொல்ல மாட்டோம்.. காரணம், எச்ஐவியால் சமூக புறக்கணிப்பு கிடைத்துவிடும்.. இந்நபர்களை வீட்டை விட்டே துரத்திவிடும் அளவுக்கு பிரச்சனை உள்ள நோய். வெளியே தெரியாமல் நாங்கள் பாதுகாப்போம். அப்படிப்பட்ட ரிப்போர்ட், மீடியாவில் வெளியே வரக்கூடாது.. அப்படி வெளியிடக்கூடாது என்று சட்டமே உள்ளது.
எந்த மருத்துவர்களும், தங்களுடைய நோயாளி பற்றி சொல்லக்கூடாது.. ஹார்ட் அட்டாக், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இப்படிப்பட்ட நோய்களை மட்டுமே டாக்டர்கள் வெளியே சொல்வார்கள்.. மற்றபடி எச்ஐவி பற்றி சொன்னால், பால்வினை நோயால் அவதிப்படுபவர்கள், ஒழுக்கங்கெட்டவர்கள், என்றெல்லாம் முத்திரை குத்தி சமூக புறக்கணிப்புக்கு ஆளாகிவிடுவார்கள்.
லேப் பெயர்: சவுக்கு சங்கர் ரிப்போர்ட் என்று சொல்லப்படும், இந்த ரிப்போர்ட்டில் கையெழுத்து எதுவுமே இல்லை.. யார் வேண்டுமானாலும் இப்படி டைப் அடிக்கலாம்.. யார் வேணும்னாலும் இப்படியொரு ரிப்போர்ட் தரலாம்.. இந்த ரிப்போர்ட்டில் லேப் பெயர் எங்கே? லேப் பெயர் எங்கே? அதனால், இப்படியொரு ரிப்போர்ட் வந்திருப்பதன் அடிப்படையில் அந்த நபர் மீது, தாராளமாக கேஸ் போடலாம்" என்றார் டாக்டர் காந்தராஜ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications