போதை பொருட்களுக்கு நோ சொல்லுங்கள்! அதிமுகவின் அந்த வாசகத்தை பயன்படுத்தி.. பேசிய விஜய்.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதை பொருட்களுக்கு நோ சொல்லுங்கள் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் இன்று மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.

அதிமுக பிரச்சாரத்தில் பயன்படுத்திய Say No Drugs என்ற வாசகத்தை பயன்படுத்தி விஜய் இந்த மீட்டிங்கில் மாணவர்கள் முன்னிலையில் பேசினார். விஜய் தனது பேச்சில், போதைப்பொருள் பயன்பாடு அச்சமூட்டுகிறது. தமிழகத்தில் போதை பொருட்கள் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையிலும் எனக்கு அச்சமாக உள்ளது.

actor vijay

எல்லா துறையுமே நல்ல துறைதான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் முழு ஈடுபாட்டோடு 100% உழைப்பை போட்டால் வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள். Say NO to temporary pleasures. Say NO to drugs என்று மாணவர்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார்.

விஜய் மீட்டிங்: பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருதுகள் இன்று வழங்குகிறார் நடிகர் விஜய். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 21 மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு இன்று சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விருது வழங்குகிறார்.

இந்த மீட்டிங்கில்தான் விஜய் போதைப்பொருள் பயன்பாடு பற்றி பேசி வருகிறார். முன்னதாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்து இருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார். முதல்முறையாக வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு.. கோபமாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் மாணவர்கள் மீட்டிங்: இந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி விருதுகள் இன்று வழங்குகிறார் நடிகர் விஜய். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வழங்குகிறார்.

கடந்த வருடமும் இதேபோல் விஜய் விருதுகளை வழங்கினார். கடந்த வருடம் நடிகர் விஜய்யின் நிகழ்ச்சி 12 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து ஒருவழியாக இரவில் முடிந்தது. எந்த அளவிற்கு ஆரவாரத்துடன் தொடங்கியதோ அதே அளவிற்கு ஆரவாரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் வழங்கினார். 1,500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகளை நடிகர் விஜய் அளித்தார்.

இந்த முறையும் அதேபோல் விஜய் பரிசுகளை வழங்க உள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் நிகழ்வில், விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மூலம் இவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.

இன்று காலை நடிகர் விஜய் பத்து நிமிடங்கள் பேசுவார். அதன்பின் மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+