இலவச லேப்டாப் திட்டம்.. மாணவர்களுக்கு செம குட்நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச லேப்டாப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வியாண்டு மற்றும் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப்கள் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதற்கு கொரோனாதான் காரணம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான இலவச லேப்டாப்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்கள் ஒப்பந்தத்தை எடுக்க முன் வராததே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை
இதனிடையே தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. லேப் டாப்பிற்கு பதிலாக, மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது. அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

அன்பில் மகேஷ் பேட்டி
அதோடு மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளாக லேப்டாப் வழங்கப்படவில்லை என்பதால், இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாணவர்களுக்கான இலவச லேப்டாட் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இலவச லேப்டாப் ரத்து?
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படவில்லை. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 11 லட்சம் லேப் டாப்கள் நிலுவையில் உள்ளது. அதனை விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டேப் இல்லை என தகவல்
திமுக தேர்தல் அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தோம். ஆனால் தற்போதைய சூழலில், டேப்-ஐ விடவும் லேப்டாப் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆலோசித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இரு நாட்களுக்கு முன் லேப்டாப்களில் அச்சிடப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை அகற்ற தமிழக அரசு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால் இன்னும் சில மாதங்களுக்குள் மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications