சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. மீண்டும் வழங்குக..பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Google Oneindia Tamil News

சென்னை: 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்துள்ளதை கைவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது 9, 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவர்களாக உள்ளனர். 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை என்பது தொடக்கக் கல்வியை ஊக்கப்படுத்துவதற்கு எதிராக அமைந்துவிடும் என ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Scholarship to Minority Students Chief Minister Stalins letter to Prime Minister

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்கவேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி தொகையை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதாகவும், ரத்து செய்த உதவித் தொகையை தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அரசின் சிறுபான்மை விரோதம்.. 1-8ம் வகுப்புக்கான ஸ்காலர்ஷிப் நிறுத்தம் - நெல்லை முபாரக் எதிர்ப்பு பாஜக அரசின் சிறுபான்மை விரோதம்.. 1-8ம் வகுப்புக்கான ஸ்காலர்ஷிப் நிறுத்தம் - நெல்லை முபாரக் எதிர்ப்பு

மத்திய அரசு 2008-2009ம் ஆண்டில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை (மெட்ரிக் ஸ்காலர்ஷிப்) அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்கீழ் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஆனால் 2022-2023ம் ஆண்டுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படாது, ரத்து செய்யப்படுகிறது, இந்த திட்டத்தின்கீழ் 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியே பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

English summary
Chief Minister M.K.Stalin has written a letter to Prime Minister Modi asking that the scholarship should be given again to the minority students studying from 1st to 8th standard. Chief Minister Stalin has asked the Union government to abandon the sudden cancellation of pre-matric scholarship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X