வீடியோ காலில் கேவலம்.. ஆபாச மெசேஜ், அரைகுறை டிரஸ்.. ஒழுக்கத்தை கற்பிக்கும் டீச்சரே இப்படி செய்யலாமா?
சென்னை: சிறுவர், சிறுமிகளின் நலனை காக்கவே போக்சோ உள்ளிட்ட சட்டங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுவர்களை தண்டிப்பதற்காகவே, நீதிமன்றங்களும் அரணாய் நின்று வருகின்றன. அப்படியிருந்தும், ஆண், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிட்டது... அதிலும், ஒழுக்கத்தையும், கல்வியையும் போதிக்கக்கூடிய ஆசிரியர், ஆசிரியைகளே அநாகரீகங்களில் இறங்கிவிடுவதை பார்க்கம்போது, அதிர்ச்சியாகவே உள்ளது.. என்ன நடந்தது மகாராஷ்டிராவில்?
கடந்த வாரம், ஆந்திரா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. சித்தூரை சேர்ந்த 19 வயது மாணவர் தனியார் கல்லூரியில் பி.டெக் முதல் வருடம் படித்து வருகிறார். அதே கல்லூரியில் 38 வயது பெண் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்..

திருமணமான இந்த பெண், கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.. அப்போதுதான், 19 வயது சித்தூர் மாணவருடன் நெருங்கி பழங்கி உள்ளார்.. மாணவரை காதலிப்பதாகவும் சொல்லியுள்ளார்.. மாணவரும் அந்த பெண்மணியை காதலித்தார்.
லேப் டெக்னீஷியன்
கடந்த மே மாதம், படிப்பு சம்பந்தமாக பெங்களூரில் டிரெயினிங் நடப்பதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு, லேப் டெக்னீஷியன் பெண்ணுடன் கிளம்பி சென்றார் மாணவர்..
ஆனால், அதற்கு பிறகு 2 மாதமாகவே வீட்டுக்கு வராததால், பெற்றோர் சந்தேகமடைந்து, விசாரித்தபோதுதான், லேப் டெக்னீஷியன் பெண்ணுடன், மகன் கிளம்பி சென்றது தெரியவந்தது..
பிறகு சித்தூர் 2-வது டவுன் போலீசில் பெற்றோர் புகார் தந்ததையடுத்து, விசாரணை நடந்தது.. பெங்களூருவில், லாட்ஜில் ரூம் எடுத்து, 2 மாதங்களாகவே மாணவருடன், அந்த பெண் ஊழியர் தங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இருவரையுமே அங்கிருந்து மீட்ட போலீசார், இருவருக்கும் அட்வைஸ் தந்து, அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அசிங்கமான மெசேஜ்
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், மராட்டிய மாநிலத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.. நவி மும்பையில் செயல்பட்டு வரும் பிரபலமான பள்ளியை சேர்ந்த ஆசிரியை,, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார்..
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில், கடந்த சில காலமாகவே இப்படியான அசிங்கமான மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்... இதன் அடுத்தக்கட்டமாக, அந்த மாணவருடன் அரை நிர்வாணமாக வீடியோ கால் பேசியுள்ளார் டீச்சர்.
இது சமீபத்தில்தான் மாணவரின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.. உடனே மாணவரின் அப்பா போலீசில் புகார் தந்தார்.. பள்ளி ஆசிரியையின் இந்த அருவெறுப்பான செயல், தன்னுடைய மகனை உளவியல் ரீதியாக பாதித்துள்ளது என்றும் புகாரில் கூறியிருந்தார்..
போக்சோவில் கைது
இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த டீச்சரை கைது செய்திருக்கிறார்கள்.. டீச்சரின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.. இதுபோல வேறு மாணவருக்கு இப்படியான மெசேஜ்களை அனுப்பியிருக்கிறாரா? என்று விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. அதேபோல, டீச்சரின் சோஷியல் மீடியா அக்கவுண்ட்களையும் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
சோஷியல் மீடியாவை தவறாக பயன்படுத்தும் ஒருசில மாணவ, மாணவிகளுக்கு நடுவில், ஆசிரியைகளும் சிக்கி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது..
இப்படி நாளுக்கு நாள் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் போக்சோவில் கைதாவது, பெற்றோர்களை நிலைகுலைய வைத்து வருகிறது.. ஒழுக்கத்தை போதிக்கக்கூடிய ஆசிரியர்களே இப்படியென்றால்???
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications